விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி ஷோக்களின் மூலம் பிரபலமடைந்தவர்கள் பலர் உள்ளார்கள். அந்த வகையில் தீனா, பாலா மற்றும் புகழ் உள்ளிட்டோர் தற்போது காமெடியில் கலக்கி வருகிறார்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் புகழ், தர்ஷா குப்தா மற்றும் பவித்ரா ஆகியோருடன் ரொமன்ஸ் செய்வதுபோல காமெடியாக நடிப்பது இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்நிலையில் பாலா ஏற்கனவே ஒரு படத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்க உள்ள அருண் விஜய் 33 என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இத்திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ், பிரியா பவானி சங்கர், ராதிகா, ஜெயபாலன் உள்ளிட்டோர் ஏற்கனவே ஒப்பந்தமாகி உள்ள நிலையில் தற்பொழுது புகழும் நடிக்கவுள்ளார் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது.
இதனை அறிந்த சினிமா வட்டாரங்கள் மற்றும் ரசிகர்கள் நடிகர் புகழிற்க்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.