குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது ஏராளமான திரைப்படங்களில் கதாநாயகியாகவும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருபவர் தான் நடிகை அம்மா அபிராமி. இவர் துப்பாக்கி முனை, ராட்சசன் போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பிரபலமடைந்தார். அதன் பிறகு தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த மிகப்பெரிய வெற்றினை பெற்றார்.
இந்த திரைப்படத்திற்கு பிறகு பெரிதாக இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் பங்கு பெற்று பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடைந்தார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார். அந்த வகையில் தற்பொழுது இவர் கதாநாயகியாக நடிக்க உள்ள திரைப்படம் தான் பெண்டுலம்.
இந்த திரைப்படத்தில் சட்டப்படி குற்றம், நாகராஜ சோழன் ,எம்ஏ எம்எல்ஏ வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த கோமால் சர்மாவுடன் இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை திரவியம் பாலா தயாரிக்க அறிமுக இயக்குனர் பி சதீஷ்குமார் அவர்கள் இயக்குகிறார். இந்த படம் சைக்காலஜிக்கல் பேண்டஸி திரில்லர் படமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் ஸ்ரீ குமார், விஜித்,ராம், பிரேம்குமார், கஜராஜா, சாம்ஸ் உள்ளிட்ட பலரும் நடிக்க இருக்கிறார்கள். மேலும் இப்படத்திற்கு சைமன் கிங் இசையமைக்க ஆனந்த் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படிப்பட்ட நிலையில் சமீப நிகழ்ச்சியில் இயக்குனர் பி சதீஷ் குமரன் இந்த படத்தினை பற்றிய சில தகவல்களை கூறியுள்ளார். அதாவது நான் 20 ஆண்டுகளாக ஒளிப்பதிவாளராக இருக்கிறேன் விளம்பர படங்கள், குறும்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறேன்.
இயக்குனர் சங்கரின் படத்தில் மேக்கிங் கேமரா மேன்னாக பணியாற்றினேன் இந்த படத்தின் மூலம் இயக்குனராகிய இருக்கிறேன் தமிழ் சினிமாவில் சைக்காலஜிக்கல் படங்கள் அரிது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் இதுவரையிலும் சொல்லப்படாத மிகவும் வித்தியாசமாக இருக்கும் சைக்காலஜிக்கல் பேண்டஸி திரில்லர் படமாக நான் இயக்கம் இந்த படம் இருக்கும் எனவும் முதல் முறையாக எட்டு கதாபாத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் புதுமையான த்ரில்லர் கதையில் சொல்லப்படும் ஒரு விறுவிறுப்பான படமாக உருவாக இருக்கிறது எனவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு எனவும் கூறியுள்ளார்.