தனக்கு கிடைத்த பரிசை பாலாவுக்கு கொடுத்த புகழ்.! அந்த பணத்தை பாலா என்ன செய்ய போகிறார் தெரியுமா.?

pukazh
pukazh

விஜய் தொலைக்காட்சி என்றாலே எப்பவும் கலகலப்பாக ஏதாவது ஒரு ரியாலிட்டி ஷோவை நடத்தக்கூடிய ஒரு நல்ல தொலைக்காட்சி ஆகும், விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்றான குக் வித் கோமாளி தமிழக மக்களிடையே மிகவும் பிரபலம் வாய்ந்தது.

தற்போதைய கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களையும்,வீட்டில் சும்மாவே உட்கார்ந்திருக்கும் நபர்களையும் விஜய் தொலைக்காட்சி தன் பக்கம் இழுத்தது என்றால் அது இதன் மூலம்தான், குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு தனி பெரும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. மேலும் விஜய் தொலைக்காட்சி ஹாட்ஸ்டார் உடன் இணைந்த பிறகு மார்க்கெட்டில் விஜய் தொலைக்காட்சி  தனி ஒரு இடம் வகிக்கிறது.

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு இவ்வளவு ரசிகர்கள் பட்டாளம் என்றால் அதற்கு காரணம் அதில் பங்கேற்கும் நபர்களே காரணம் ஆவர், இதில் புகழ் சமீபத்தில் தமிழ்நாட்டு மக்களால் பெரிதும் பேசபட்டவர் ஆவார், ஏனென்றால் அந்த அளவிற்கு புகழ், புகழ் பெற்றவராவார்.

தற்பொழுது நடந்த குக் வித் கோமாளி சீசன் 3ல் ஸ்ருதிகா டைட்டில் ஜெயித்தார் இதற்காக அவருக்கு 5 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது மேலும் 1 லட்சம் ரூபாய் ப்ரீத்தியின் வீட்டு உபயோக பொருட்கள் மூலம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஸ்ருதியுடன் கோமாளியாக நடித்த புகழும் 1 லட்சம் ரூபாய் பரிசாக பெற்றார்.

இப்படி பரிசாக பெற்ற தொகையை புகழ், இங்கு நான் சில காலமாக தான் உள்ளேன் ஆனால் இங்கு நீண்ட காலமாக உள்ள பாலாவிற்கு நான் இந்த பரிசை சமர்ப்பிக்கிறேன் என்று கூறினார், இதைத்தொடர்ந்து ஸ்ருதியும் தன்னிடம் இருந்த 1 லட்சம் ரூபாயை பாலாவிடம் வழங்கினார்.

மேலும் பாலாவும் ஒரு லட்சம் பரிசாக பெற்றார் இதை தொடர்ந்து மொத்தம் 3 லட்சத்தையும் பெரம்பலூரில் உள்ள ஆதரவற்ற பெண் குழந்தைகளின் படிப்பு செலவிற்காக இதை தருகிறேன் என்று மேடையில் அங்கேயே கூறினார் இது அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.