சன் டிவிக்கு என்ட்ரி கொடுக்கும் குக் வித் கோமாளி பிரபலம்.!

cook-with-comali-rakshan
cook-with-comali-rakshan

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து ரியாலிட்டி ஷோக்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது.அந்த வகையில் சீரியல்களை விடவும் ரியாலிட்டி ஷோர்களுக்கு தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வரும் நிலையில் தொடர்ந்து விஜய் டிவி பல சுவாரசியமான ஷோக்களை அறிமுகப்படுத்துவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் காமெடியை மையமாக வைத்து மிகவும் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இந்த சீரியல் கடந்த மூன்று வருடங்களாக மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. சமீபத்தில் தான் மூன்றாவது சீசன் முடிந்த நிலையில் டைட்டில் வின்னராக ஸ்ருதிகா வெற்றி பெற்றார்.

இப்படிப்பட்ட நிலையில் இந்நிகழ்ச்சியில் கோமாளி மற்றும் குக்குகள்அனைவருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் பலரும் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்று வருகிறார்கள். உதாரணமாக அஸ்வின், புகழ், தர்ஷா குப்தா,சிவாங்கி,பவித்ரா உள்ளிட்ட பலரையும் சொல்லிக் கொண்டே போகலாம்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக பங்கு பெற்று பிரபலமடைந்த ஒருவர் தற்பொழுது சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது. அதாவது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றவர் தான் கனி.

kani
kani

கனி சமையல் அனைத்தும் மிகவும் அருமையாக இருந்ததால் வெற்றி பெற்றார் மேலும் கார குழம்பு கனி எனவும் இவரை அழைத்து வந்தார்கள் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவர் சன் டிவியில் புதிதாக அறிமுகமாக உள்ள சமையல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கு பெற இருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது.இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பற்றி சொல்ல வேண்டும் என்றால் சிலர் தற்கொலை செய்ய முடிவெடுத்து இருந்ததாகவும் அப்பொழுது இந்நிகழ்ச்சி ப்ரோமோ ஒன்று வந்ததால் அதனை பார்த்துவிட்டு அதன் பிறகு தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவெடுத்தாராம் ஆனால் அந்த ப்ரோமோவை பார்த்தவுடன் சிரித்ததால் தனது மன கவலை நீங்கி தற்கொலை முயற்சியை கைவிட்டாராம். இதனை தொடர்ந்து ஒருவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் இதன் மூலம் தற்பொழுது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாகவும் கூறிவுள்ளார் இவ்வாறு பலரின் வாழ்வில் துக்கங்களை போக்கும் வகையில் இந்நிகழ்ச்சி இருந்து வருகிறது.