உயிரோடு இருக்கும் அம்மா அப்பாவிற்கு ஏன் திதி கொடுக்கிறீங்க என்று கேட்கும் சாமியார்.! குழப்பத்தில் குடும்பத்தினர்..

chellama
chellama

விஜய் டிவியின் தொடர்ந்து ஏராளமான புதிய சீரியல்கள் மற்றும் ஷோக்களை   அறிமுகப்படுத்தி டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறார்கள். பொதுவாக தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் தொடர்ந்து போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.அதில் முக்கியமாக விஜய் டிவி தொடர்ந்து பல சீரியல்களை அறிமுகப்படுத்துவது மட்டுமல்லாமல் ரசிகர்கள் விரும்பும் வகையில் நல்ல கதையம்சம் உள்ள சீரியல்களை இயக்கி வருகிறார்கள்.

அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி,நாம் இருவர் நமக்கு இருவர்,ராஜா ராணி 2, காற்றுக்கென்ன வேலி, மௌனராகம் 2, பாவம் கணேசன் தென்றல் வந்து என்னை தொடும் தமிழ் சரஸ்வதியும் போன்ற தொடர்ந்து ஏராளமான சீரியல்கள் சூப்பர்ஹிட் சீரியல்கள் ஆக ஒளிபரப்பாகி வருகிறது.

சில வாரங்களுக்கு முன்பு செந்தூரப்பூவே மற்றும் வேலைக்காரன் இரண்டு சீரியல்களும் நிறைவடைந்தது. இந்த இரண்டு சீரியல் காலமே திரைப்படத்தின் கதையை மையமாக வைத்துதான் ஒலிபரப்பப்பட்டு வந்தது.  இப்படிப்பட்ட நிலையில் மதியம் 2 மணி அளவில் ஒளிபரப்பப்பட்டு வந்த வேலைக்காரன் சீரியலுக்கு பதிலாக தற்பொழுது செல்லம்மா என்ற சீரியலை அறிமுகப்படுத்தி உள்ளார்கள்.

இந்த சீரியல் கணவன் தன்னை தனியாக தவிக்க விட்டு செல்ல ஒரு பெண் குழந்தையை வைத்துக் கொண்டு தனியாக போராடும் ஒரு பெண்மணியின் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள சீரியல் தான் செல்லம்மா.

இவ்வாறு இந்த சீரியல் ஒரு பெண்மணியின் கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி நிலையில் இந்த சீரியலில் இரண்டு கதாநயகிகள் யார் தங்களுடைய அப்பா, அம்மா என்று தெரியாமலே வாழ்ந்து வருகிறார்கள். மேலும் இவர்கள் அக்கா-தங்கை என்பதும் இவர்களுக்கு தெரியவில்லை. இவ்வாறு இவர்கள் கோவிலுக்கு சென்ற பொழுது சிலர் ஏன் உயிரோட இருக்கும் உங்க அப்பா அம்மாவுக்கு திதி கொடுக்குறீங்க என்று கூற இருவரும் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.