நடிகர் தனுஷ் தமிழ் சினிமா உலகில் இருக்கின்ற இடம் தெரியாமல் சைலண்டாக இருந்து கொண்டு சூப்பரான படங்களை கொடுத்து அசத்தி வருகிறார். அந்த வகையில் இப்பொழுது கூட மித்ரன் ஆர் ஜவகர் என்ற இயக்குனருடன் மீண்டும் ஒருமுறை கைகோர்த்து தனுஷ் நடித்த திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம் படம்.
இந்த படம் முழுக்க முழுக்க நண்பர், காதல், செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்த ஒரு கலவையான திரைப்படமாக இருந்ததால் ரசிகர்களும் தாண்டி மக்களை வெகுவாக திரையரங்கு பக்கம் இழுத்து படம் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் வசூலால் தற்பொழுது தனுஷூம் சரி பட குழுவும் செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றனர்.
இந்த படம் இதுவரை ஒட்டுமொத்தமாக 70 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது இந்த படத்தில் தனுஷ் உடன் கைகோர்த்து நித்தியா மேனன், பிரியா பவானி சங்கர், ராசி கண்ணா, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், முனீஸ் காந்த் மற்றும் பலர் நடித்து இருந்தனர்.
இப்படி இருக்கின்ற நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பிரபலம் ஒருவர் இழந்துள்ளார் அந்த பிரபலம் வேறு யாரும் அல்ல விஜய் டிவி மற்றும் வெள்ளி திரையில் தற்பொழுது தலைக்காட்டி ஓடிக்கொண்டிருக்கும் ராமர் தான். இவர் முனீஸ் காந்த் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் ராமரை நடிக்க வைக்க தான் தனுஷ் திட்டமிட்டு இருந்தாராம்.
ஆனால் அந்த சமயத்தில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் ராமர் பிஸியாக இருந்த காரணத்தினால் திருச்சிற்றம்பலம் படத்தில் நடிக்க முடியாமல் போனதாம். இதை அறிந்த ரசிகர்கள் இப்படி ஒரு பொன்னான பட வாய்ப்பை இழந்து விட்டீர்களே எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.