ஷங்கர், வெற்றிமாறன் படங்களை தவறவிட்ட விஜய் டிவி பிரபலம்.. இப்ப புலம்பி என்ன பிரயோஜனம்.. வெளிவந்த பரபரப்பு தகவல்

vijay-tv
vijay-tv

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஒரு காமெடியன் மதுரை முத்து இவர் வெள்ளித்திரையில் பட வாய்ப்பு கிடைக்காமல்  போராடிக் கொண்டிருக்கிறார். மதுரை முத்து முதலில் “அசத்தப்போவது யாரு” என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரை பக்கம் நுழைந்தார். அதன் பிறகு ரியாலிட்டி ஷோவில் எனது காமெடி திறமையை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

ஒரு கட்டத்தில் சின்னத்திரையும் தாண்டி பல வெளிநாடுகளுக்கு சென்று அங்கேயும் தனது காமெடியை வெளிக்காட்டி அசத்தினார். அதுமட்டுமில்லாமல் பட்டிமன்ற பேச்சாளராகவும் இவர் பிரபலமானவர் இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் கடந்த சில வருடங்களாக விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், போட்டியாளராகவும்,  ஜட்ஜாகவும் ஓடிக் கொண்டிருக்கிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் மதுரை முத்து சமீபத்திய பேட்டி ஒன்றில் வெற்றிமாறன் மற்றும் ஷங்கர் படம் தவறு விட்டது குறித்து பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது.. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ஆடுகளம். இந்த படத்தின் ஒரு முக்கிய பணிக்காகத்தான் இயக்குனர் வெற்றிமாறன் மதுரை முத்துவை அணுகு உள்ளாராம்.

ஆடுகளம் படத்தின் சூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது தன்னுடைய துணை இயக்குனர் துரை செந்தில் மூலம் மதுரை முத்துவிற்கு அழைப்பு விடுத்த நிலையில் மதுரை முத்துவும் அங்கு சென்று வெற்றிமாறனை சந்தித்துள்ளார் அப்பொழுது வெற்றி மாறன் பெரிய பைல் ஒன்றை கொடுத்து அதில் இருக்கும் வசனங்களை மதுரை பாஷையில் மாற்றி கொடுக்க கூறியுள்ளார்.

ஆனால் சில காரணங்களால் அது முடியாது என மதுரை முத்து கூறிவிட்டாராம். அதனைத் தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான நண்பன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அழைப்பு விடுத்து உள்ளார். ஆனால் அந்த சமயத்தில் வெளிநாட்டில் நிகழ்ச்சி ஒன்று புக் ஆகிய இருந்ததால் அந்த வாய்ப்பையும் மதுரை முத்து தவறவிட்டு உள்ளார்.