ஜீ தமிழின் ‘சீதா ராமன்’ சீரியலில் பிரியங்காவிற்கு பதில் என்ட்ரி கொடுத்த விஜய் டிவி பிரபலம்.! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..

sita saran
sita saran

தொடர்ந்து தமிழ் சின்னத்திரை தொலைக்காட்சிகள் ஏராளமான புதிய சீரியல்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில் அனைத்து சீரியல்களுக்கும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் முக்கியமான தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் மக்களின் ஆதரவுடன் நல்ல ரீச்சினை பெற்றிருக்கும் நிலையில் தற்போது சீதா ராமன் சீரியலில் இருந்து ஹீரோயின் பிரியங்கா நல்காரி விலகி இருக்கிறார்.

எனவே அவருக்கு பதிலாக விஜய் டிவி பிரபலம் நடிக்க ஒப்பந்தமாக இருக்கும் நிலையில் அது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஜீ தமிழில் கலந்த பிப்ரவரி 20ஆம் தேதி முதன் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளோடு தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் சீதாராமன்.

இந்த சீரியலில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ரோஜா சீரியலின் ஹீரோயின் பிரியங்கா நல்காரி ஹீரோயினாக நடித்து வருகிறார். ரோஜா சீரியல் கடந்த வருடம் நிறைவடைந்த நிலையில் அதன் பிறகு சீதாராமன் சீரியலில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்த தொடரில் பாக்கியலட்சுமி சீரியல் புகழ் வில்லி ரேஷ்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

sri nithi
sri nithi

இந்த தொடர் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் பிரியங்கா திடீரென இந்த சீரியலில் இருந்து விளங்கி விட்டதாக அறிவித்திருந்தது. ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரியங்கா நல்காரி சமீபத்தில் தனது காதலரை மிகவும் சிம்பிளான முறையில் கரம்பிடித்த நிலையில் இதன் காரணமாகத்தான் இவர் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார் என கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது சீதாராமன் சீரியலில் பிரியங்கா நல்காரி விளங்கி இருக்கும் நிலையில் அவருக்கு பதிலாக கதாநாயகியாக ஸ்ரீநிதி சீதாவாக நடிக்க இருக்கிறார். அதாவது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே சீரியலில் ஹீரோயினாக அறிமுகமான நிலையில் இதற்கு மேல் சீதாராமன் சீரியலில் சீதாவாக இருக்கிறார் இவ்வாறு ஸ்ரீநிதிக்கும் தனி ரசிகர் பட்டாளம் இருந்து வரும் நிலையில் இவருடைய நடிப்பும் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.