மணிமேகலை, புகழை தொடர்ந்து அடுத்ததாக புதிய கார் வாங்கிய விஜய் டிவி பிரபலம்.? வெளியான கலக்கல் புகைப்படம்.

pukazh and manimegalai
pukazh and manimegalai

சின்னத்திரையில் பல சேனல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன அதில் மக்கள் ரசிகர்கள் பிரபலங்கள் என பலருக்கும் பிடித்த டிவி சேனல் என்றால் அது விஜய் டிவி தான். சின்னத்திரையில் வளர்ந்துவரும் பிரபலங்கள் பலரும் விஜய் டிவியில் ஒரு அங்கமாக இருக்கவே ஆசைப்படுகின்றனர்.

ஏனென்றால் விஜய் டிவியில் கலந்து கொண்டால் நாம் பிரபலம் அடைந்துவிடலாம் என்ற ஒரு நம்பிக்கைதான். அப்படி விஜய் டிவியில் பயணித்த பலரும் தற்போது மக்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரிதும் பிரபலமடைந்து வெள்ளித்திரையிலும் பயணித்து வருகின்றனர். மேலும் மற்ற சேனல்களில் பணியாற்றிவரும் பிரபலங்கள் பலரும் விஜய் டிவியில் பயணிக்கவே ஆசைப்படுகின்றனர்.

அப்படி முதலில் சன் டிவியில் தனது பயணத்தை தொடங்கியவர் தான் மதுரை முத்து தற்போது சில காலங்களாக இவர் விஜய் டிவியில் காமெடியனாகவும், ஜட்ஜ் ஆகவும் பயணித்து வருகிறார். விஜய் டிவியில் பிரபல காமெடி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரிதும் பிரபலமடைந்து காணப்பட்டவர்.

இந்த நிகழ்ச்சியை அடுத்து சூப்பர் டாடி மற்றும் பல சிறப்பு நிகழ்ச்சிகள் போன்றவற்றில் கலந்துகொண்டு தனது காமெடி கலந்த பேச்சை வெளிப்படுத்தி மக்களை கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மதுரை முத்து கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் ஜட்ஜாக வலம் வருகிறார்.

இந்த நிலையில் சமீபகாலமாக விஜய் டிவி பிரபலங்களான புகழ் மணிமேகலை போன்ற பலரும் புதிய கார் வாங்கி வரும் நிலையில் தற்போது மதுரை முத்துவும் புதிய கார் ஒன்றை வாங்கிய உள்ளாராம். மேலும் காருடன் சேர்ந்து அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகின்றன.

madhurai muthu
madhurai muthu