முரட்டு ஹீரோவுடன் முதல் முறையாக கைகோர்க்கும் விஜய் டிவி புகழ் வெளியான அசத்தல் புகைப்படம்.

pugazh
pugazh

விஜய் டிவி தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் அறிமுகமானவர் புகழ். பின்பு தனது காமெடியாலும்,பேச்சு திறமையாலும் மக்கள் மனதில் இடம் பிடிக்க தொடங்கினர். சின்னத்திரையில் பாப்புலராகி வெளிநாடுகளிளும் ஈவென்ட் செல்வதற்கான வாய்ப்புகளும் அவருக்கு கிடைத்தது.

பின்பு ஆரம்பத்தில் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் வந்து சென்றார். ஆனால் இப்பொழுது அவருக்கு பல டாப் நடிகர்களின் படங்களில் காமெடியனாக வாய்ப்புகளும் கிடைத்தன. அதற்கு முக்கிய காரணம் இவர் அந்த தொலைக்காட்சியில் நடந்த மாபெரும் நிகழ்ச்சியானா குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கு பெற்றார்.

அதில் இவர் காமெடியும், முகபாவனையும் மக்கள் அனைவரையும் ஈர்த்தது. அதனையடுத்து அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தது. சமீபத்தில் கூட அஜித்தின் வலிமை படத்தில் நடித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இவருக்கு தற்போது இயக்குனர் ஹரி தயாரிப்பில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் யானை திரைப்படத்தில் காமெடியனாக நடிக்க வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

இதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்து அதை சார்ந்த புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். ஹரி ஆக்ஷன் கலந்த  திரைப்படங்களை எடுத்து வந்தாலும் அந்த திரைப்படத்தில் காமெடி மிகப்பெரிய பங்கு வகிக்கும் அதனால் யானை திரைப்படத்தில் புகழுக்கு நிறைய காமெடிகள் இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் மென்மேலும் பல பட வாய்ப்புகளை கைப்பற்ற வேண்டும் என சின்னத்திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களும் தனது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். காமெடி நடிகர் புகழ் யானை படக்குழுவுடன் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ.

pugazh
pugazh