சின்னத்திரையில் பிரபலமான நடிகர் பிரஜின் சினிமாவிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் குறிப்பாக பழைய வண்ணாரப்பேட்டை போன்ற படங்களில் நடித்த பிரபலமான நடிகர் பிரஜின். தற்போது D3 என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் தற்போது வெளிவர காத்திருக்கிறது.
இந்த நிலையில் D3 படத்தில் ஆடியோ லான்ச் இன்று நடைபெற்ற முடிந்தது இதில் கலந்து கொண்டுள்ள அனைவரும் தங்களுடைய உழைப்பால் உருவான படம் அதனால் அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர் அது மட்டும் அல்லாமல் குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த படம் ஒரு திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது என்று கூறியுள்ளனர்.
மேலும் இந்த திரைப்படம் ஒரு கொலை, ஒரு கொள்ளை, ஒரு காணவில்லை கேஸ், இவை மூன்றையும் மையமாக வைத்து தான் இந்த திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம் அதனால் இந்த திரைப்படம் ஒரு புது வித்தியாசத்தை கொடுத்துள்ளது என்று கூறியுள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் பிரஜின் பேசையில் இந்த படத்திற்காக என்னுடைய முழு உழைப்பையும் போட்டிருக்கிறேன் அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் இயக்குனர் கேட்டதால் இந்த படத்திற்காக நான் நிர்வாணமாகவும் நடித்துள்ளேன் என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்தப் படம் ஒரு திரில்லர் படம் முழுக்க முழுக்க இரவு நேரத்தில் தான் முக்காவாசி நாட்கள் படமாக்கப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படம் எனக்கு புது அனுபவத்தை கொடுத்தது அது மட்டுமல்லாமல் இந்த படத்தின் இயக்குனர் தன்னிடம் வந்து கதை கூறிய போது எனக்கு மிகவும் பிடித்திருந்தது அதனால் இந்த திரைப்படத்தில் கமிட் ஆனேன் அது மட்டும் அல்லாமல் கிட்டத்தட்ட சினிமாவில் 25 திரைப்படத்தில் நான் நடித்துள்ளேன் அந்த 25 திரைப்படம் அனைத்தும் வெளியாகி உள்ளது இன்று வரையிலும் ஒரு திரைப்படம் கூட வெளிவராமல் இருந்தது கிடையாது அது மட்டுமல்லாமல் எந்த ஒரு திரைப்படமும் தான் நடிப்பில் பாதியில் நின்றது கிடையாது என்று கூறியுள்ளார்.