பல வருட காதலை வெளிப்படுத்திய விஜய் டிவி பிரபலங்கள்.! இதற்கு மேல் இவர்கள் ரியல் ஜோடி..

vijay-tv
vijay-tv

தமிழ் சின்னச்திரையில் முக்கிய தொலைக்காட்சியாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் டிவியில் தொடர்ந்து ஏராளமான சீரியல்கள் அறிமுகமாகி வருகிறது மேலும் இந்த சீரியல்களின் மூலம் புதுமுக நடிகர் நடிகைகளும் அறிமுகமாகி வரும் நிலையில் ரீல் ஜோடிகளாக அறிமுகமாக பலரும் ரியல் ஜோடிகளாக மாறி வருகிறார்கள் ஒரே சீரியலில் நடிப்பதன் மூலம் தொடர்ந்து ஏராளமான பிரபலங்கள் ரியலாக திருமணம் செய்து கொண்டு இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது விஜய் டிவி பிரபலங்கள் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் தற்போது இவர்கள் இன்ஸ்டாகிராம் மூலம் அனைவருக்கும் தங்களுடைய காதலை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சி அறிமுகமான காரணத்தினால் ஒரு சில சீரியல்கள் திடீரென நிறைவடைந்தது அதில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் சிப்பிக்குள் முத்து.

இந்த சீரியலின் கதை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வந்த நிலையில் திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சியினால் முடித்தார்கள் இந்த சீரியலில் இணைந்து நடித்தவர்கள் தான் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுத்தா இருவரும் ரகசியமாக காதலித்து வந்த நிலையில் தற்போது இந்த சீரியல் நிறைவடைந்து உள்ளது.

samyutha 1
samyutha 1

எனவே தங்களுடைய காதலை உறுதிப்படுத்தும் வகையில் மிகவும் ரொமான்டிக்காக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்கள் நிறைமாத நிலவே என்ற வெப் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் சம்யுக்தா. அதே போல் விஷ்ணுகாந்தும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ரஜினி உள்ளிட்ட பல சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

samyutha
samyutha

இவ்வாறு ரீல் ஜோடிகளாக நடித்து வந்த இவர்கள் தற்பொழுது ரியல் ஜோடிகளாக மாறி உள்ளார்கள். இவ்வாறு இவர்களுடைய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக அனைவரும் இவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள் மேலும் எப்பொழுது திருமணம் என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.