சூரரைப் போற்று திரைப்படத்திற்குப் பின்பு நடிகர் சூர்யா தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக களம் இறங்கிய இவர் நந்தா,பிதாமகன்,சிங்கம் போன்ற பல திரைப்படங்களில் தனது முழு திறமைகளை வெளிப்படுத்தி அதன் மூலம் தற்பொழுது மக்களிடையே என்றும் நீங்கா இடத்தைப் பிடித்து விட்டார் என்றுதான் கூறவேண்டும்.
சூர்யாவின் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்திருக்கும் அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் சூரரைப்போற்று இந்த திரைப்படம் வெளியானபோது சூர்யாவிற்கு பல பிரபலங்களும் பாராட்டு தெரிவித்ததுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் பல சாதனைகளை படைத்தது.
மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன்,வாடிவாசல் மேலும் ஒரு சில திரைப்படங்களில் தொடர்ச்சியாக கைப்பற்றி நடித்து வருகிறார் அதிலும் குறிப்பாக பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றதை நாம் பார்த்திருப்போம்.
அதைப்போல் இந்த திரைப்படத்தை பற்றி தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது அதாவது இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து விஜய் டிவியில் உள்ள ஒரு சில பிரபலங்கள் நடிக்கப் போகிறார்கள் என தகவல் கிடைத்துள்ளது ஏற்கனவே இதில் பிரியங்கா,சூரி,சத்யராஜ் ,ரண்யா பொன்வண்ணன் போன்றவர்கள் நடிக்கின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் இந்த திரைப்படத்தில் புதிதாக விஜய் டிவி புகழ்,ராமர் மற்றும் தங்கதுரை போன்ற பல பிரபலங்களும் இருக்கிறார்கள் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து வெளியான இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ஒரு சில ரசிகர்கள் இந்த திரைப்படத்தில் புகழ் இருக்கிறார் என்பது தெரிந்தாலே மக்கள் அனைவரும் குஷி ஆகி விடுவார்கள் என்று கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.