விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து நாளுக்கு நாள் எதிர்பாராத வகையில் ஏராளமான சண்டைகள் அரங்கேறி வருகிறது மேலும் நாள்தோறும் சண்டை சச்சரவு என இருந்து வரும் நிலையில் டாஸ்க்களும் பயங்கரமாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பொம்மை டாஸ்க் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே பல சச்சரவையில் இருந்தவரும் போட்டியாளர்கள் அனைவரும் இந்த டாஸ்க் பயங்கர உச்சகட்டமாக சண்டை போட்டு வருகிறார்கள். அதில் நேற்றைய நிகழ்ச்சிகள் போட்டியாளர்களுக்குள்ளேயே விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது தள்ளுமுள்ளு ஏற்பட்டு செரினா கீழே விழுகிறார். இதனால் அனைத்து போட்டியாளர்களும் பதற அனைவருக்கும் தன்னுடைய ஹீரோயிசத்தை காட்ட வேண்டும் என்பதற்காக ஓடிப்போய் அவரை தூக்கி கொண்டு மருத்துவர் அறையில் சேர்க்கிறார் அசீம்.
பிறகு என்ன நடந்தது என்று தெரியாமல் தனலட்சுமியிடம் வந்து நீ எல்லாம் ஒரு பெண்ணா இப்படி தள்ளுற ஏதாவது நடந்திருந்தால் என்ன செய்வது என ஆக்ரோஷமாக காத்துகிறார். இதற்கு தனலட்சுமி நான் தள்ளிவிடல என எடுத்துக் கூறியும் அசீம் கத்திக் கொண்டிருக்கிறார். இதனால் வேறு வழி இல்லாமல் தனலட்சுமி கேமராவில் எல்லாம் பதிவாகி இருக்கும் அதில் என் மீது தவறு இருந்தால் நான் மன்னிப்பு கேட்கிறேன் என அமைதியாக சென்று விடுகிறார்.
இவ்வாறு இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக யார் மீது தவறு என ரசிகர்கள் கண்டுபிடித்து உள்ளனர் அதாவது பொம்மையை ஒருவருக்கொருவர் பிடுங்க முற்படும்பொழுது சரி நான் கீழே விழுகிறார் அந்த வகையில் அந்த சம்பவத்தில் அனைவருக்கும் பங்கு இருக்கிறது ஆனால் செரினாவின் பக்கத்தில் தனலட்சுமி இருந்ததால் அவர் மீது மொத்த பழியையும் போட்டு விடுகின்றனர்.
எனவே இதனை குறும்படம் போட்டு காமிக்க வேண்டும் என ஆண்டவரிடம் கோரிக்கை வைத்து வருகின்றார்கள் ரசிகர்கள். இவ்வாறு கடந்த வாரமே அசீம்க்கு போட்டியாளர்கள் அனைவரும் ரெட் கார் கொடுத்த நிலையில் தன்னுடைய வில்லத்தனத்தை இந்த வாரம் காட்டி வருகிறார் மேலும் தனலட்சுமியை வில்லி போன்று சித்தரித்து வருகிறார். அசீம் ஒரு கட்டத்திற்கு பிறகு அமுதவாணனும் அசீம்முக்கு எதிராக பேசிக் கொண்டிருக்கிறார்.