விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில் தொடர்ந்து ஏராளமான சண்டைகள் அரங்கேறி வருகிறது மேலும் மிகவும் சுவாரஸ்யமான எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் கடந்த இரண்டு வாரங்களில் அனைத்து போட்டியாளர்களின் சுயரூபம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியாகி இருக்கிறது.
மேலும் நாளுக்கு நாள் பிரச்சனை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது இப்படிப்பட்ட நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் ஜனனி, அசீம், ரக்ஷிதா, ஆயிஷா, மகேஸ்வரி, ஏ.டி.கே, அசல் கோளாறு ஆகியவர்கள் தேர்வாகியுள்ளனர். மேலும் கடந்த வாரம் எதிர்பாராத நிலையில் சாந்தி மாஸ்டர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் எனவே இந்த வாரம் யார் வெளியேறுவார் என ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து வருகிறார்கள்.
அந்த வகையில் இந்த வாரம் போட்டிகளின் மூலம் பல சண்டைகள் ஏற்பட்டு இருக்கிறது இந்த நிலையில் அனைத்து போட்டியாளர்களும் மிகவும் விறுவிறுப்பாக தங்களுடைய ஆட்டத்தை விளையாடி வரும் நிலையில் அசல் கோளாறு ஒரு புறம் பெண்களோடு மட்டுமே விளையாடி வருகிறார் பெண்களிடம் பேசிக் கொண்டிருப்பது போல அவரைத் தொட்டு தடவி கொண்டிருக்கிறார்.
இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கடுப்பினை ஏற்படுத்தி இருக்கிறது இதுவரையிலும் அசல் கோளாறு போன்ற ஒரு நபரையும் கடந்த ஐந்து சீசன்களிலும் பார்க்கவில்லை எனவும் கூறி வருகிறார்கள். இந்நிலையில் தற்பொழுது அசல் நாமினேஷன் லிஸ்டில் தேர்வாகி உள்ளார் மேலும் அவர்தான் முதல் நாமினேஷன் இப்படிப்பட்ட நிலையில் இந்த வாரம் அவருக்கு வெறும் ஐந்து சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்திருக்கிறது.
எனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அசல் கோளாறு இந்த வாரம் விரைவில் வெளியேறப் போகிறார். இவரைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் சிங்கப்பூர் மாடல் அழகி நிவாஷி அசலுடன் நெருங்கி பழகி வருகிறார் மேலும் அவர் மற்ற போட்டியாளர்களிடம் பெரிதாக பழகாமல் இருந்து வரும் நிலையில் இதனை பயன்படுத்திக் கொண்ட அசல் இவரிடமும் தவறாக நடந்து கொள்கிறார்.