அபிராமியை தொடர்ந்து மற்றொருவரை வீட்டுக்கு அனுப்பிய பிக்பாஸ்.! விமர்சனம் செய்யும் ரசிகர்கள்.

biggboss ultimate
biggboss ultimate

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24மணி நேரமும் ஒளிபரப்பி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ் அல்டி மேட்.  கடந்த ஐந்து வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியல் இறுதி வாரத்தை நெருங்கியுள்ள நிலையில் அனைத்து போட்டியாளர்களும் கடுமையாக போட்டி போட்டுக் கொண்டு விளையாடி வருகிறார்கள். அந்த வகையில் பாலாஜி முருகதாஸ், தாமரைச்செல்வி, ரம்யா பாண்டியன், ஜூலி, நீருப் நந்தகுமார் அவர்கள் இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த வாரம் எவிக்ஷன் பிராசஸ் டிஃபரண்டாக இருக்க வேண்டும் என்பதற்காக அபிராமியை இரவு நேரத்தில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். பிறகு 5 போட்டியாளர்கள் இருந்த நிலையில்  ஜூலிக்கு ரசிகர்கள் மத்தியில் ஓட்டு குறைவாக இருந்ததால் சமீபத்தில் ஜூலியும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவுள்ளார்.

அதுவும் பொதுவாக அனைத்து பிக்பாஸ் போட்டியாளர்களும் எலிமினேட் ஆனால் சக போட்டியாளர்களை சந்தித்து விட்டு போவது வழக்கம் ஆனால் அதனை கூட செய்யாமல் பிக்பாஸ் ஜூலியை யாருக்கும் தெரியாமல் வெளியேற சொல்லி உள்ளார்கள் எனவே ரசிகர்கள் இதனை விமர்சன படுத்தி வருகிறார்கள்.

ஏனென்றால் சாதாரண ஒரு படம் புரமோஷனுக்காக பிக்பாஸ் வீட்டிற்கு வருபவர்களை கூட போட்டியாளர்கள் அனைவரும் உற்சாகப்படுத்திய அவர்களை மகிழ்ச்சியுடன் அனுப்புவது வழக்கம் ஆனால் பிக்பாஸ் வீட்டில் இத்தனை நாட்களாக தாக்கு பிடித்த ஜூலியை இப்படி அனுப்பி விட்டீர்களே என்று ரசிகர்கள் விமர்சன படுத்தி வருகிறார்கள்.