நடுராத்திரியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அபிராமி.! உற்சாகத்தில் ரசிகர்கள்.

abirami
abirami

பிக்பாஸ் நிகழ்ச்சி போலவே பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. அந்த வகையில் ஐந்து சீசன்கள் கலந்துகொண்ட போட்டியாளர்கள் சிலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் தங்களுக்கென்ன ஒரு இடம் பிடித்துள்ளார்கள்.

அதுமட்டுமல்லாமல் தங்களது பெயரை டேமேஜ் செய்து கொண்ட சிலர் நல்ல பெயரை எடுத்து ரசிகர்கள் மத்தியில் அவர்களுக்கு என்று இருந்த ஒரு இமேஜை மாற்றி கொண்டவர்களும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இந்நிகழ்ச்சி இறுதி வாரத்தை அடைய உள்ள நிலையில் தற்பொழுது பாலாஜி முருகதாஸ்,தாமரைச் செல்வி,நிரூப் நந்தகுமார், ஜூலி மரியானா, அபிராமி மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியவர்கள் இருந்து வந்தார்கள்.

எனவே இந்நிகழ்ச்சியின் இறுதி வாரம்  என்பதால் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு  மிகவும் கடுமையாக  விளையாண்டு வருகிறார்கள் . அதோடு இந்த வாரம் எவிக்சன்  வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக நைட்டி நைட்டில் நடந்துள்ளது. இந்த வாரம் ஜூலி மற்றும் அபிராமி இருவருமே எவிக்ஷன்  செய்யப்பட்டிருந்ததால் இந்த வாரத்தின் இறுதியில் யாராவது ஒருவர் வெளியேறும் நிலைமையில் இருந்து வந்தார்கள்.

எனது ஏராளமானோர் அபிராமி தான் வந்ததிலிருந்து ஓவராக செய்கிறார் சீன் போட்டு கொண்டு இருக்கிறார் எனவே அபிராமி தான் வெளியேற வேண்டும் என தெரிவித்து வந்த நிலையில் தற்போது நேற்று இரவு அபிராமி இந்த போட்டியில் இருந்து வெளியேறி உள்ளார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் ஓட்டுகள் அடிப்படையில் வெற்றியாளராக பாலாஜி முருகதாஸ் இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது இதனை தொடர்ந்து இரண்டாவது மூன்றாவது இடம் என தாமரை மற்றும் நிரூப் அடுத்தடுத்து பிடித்துள்ளார்கள்.