விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன்6 தற்பொழுது இரண்டு வாரங்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் பல சிறப்பான டாஸ்க்கள் ரசிகர்கள் மனதை கவர்ந்து வருகிறது. தற்பொழுது பிக்பாஸ் வீட்டின் முதல் தலைவராக ஜிபி முத்து வெற்றி பெற்றிருக்கிறார் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்கள் கடிகாரத்தில் நின்று சாமர்த்தியமாக ஜெய்த்துள்ளார் ஜிபி முத்து.
இதனை தொடர்ந்து டான்ஸ் நடைபெற இருக்கிறது எனவே தற்போது அதிலும் தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலம் வெற்றி பெற்று தன்னுடைய ஆர்மியை தொடர்ந்து கவர்ந்து வருகிறார். 20 போட்டியாளர்களுடன் தொடங்க இந்த நிகழ்ச்சியை தற்போது 21வது போட்டியாளராக மைனா நந்தினியும் இணைந்துள்ளார். மற்ற சீசர்களை விட இந்த சீசனில் போட்டியாளர்கள் அதிகம் என்பதால் அடிக்கடி இவர்கள் இடையே சண்டை ஏற்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஜிபி முத்துவிடம் தனலட்சுமி கடுமையாக சண்டை போட்டு வந்த நிலையில் ஜிபி முத்து கேப்டனாக மாறிய பிறகு தனலட்சுமிக்கு ஆப்பு வைத்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது டான்ஸ் வைக்கப்பட்டு இருக்கிறது அந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் இருவர் ஒரே மேடையில் நடனமாடி சக போட்டியாளர்களை கவர வேண்டும் எனவே ஏடிகேவுடன் ஜி பி முத்து களமிறங்க இவர் அனைவரையும் அசர வைக்கும் வகையில் நடனம் ஆடுகிறார்.
இலங்கையை சேர்ந்த ராக் டான்சரான ஏடிகேவையே ஜிபி முத்து இன்று நடனமாடி இந்த போட்டியில் சிறப்பாக வெற்றி பெற்று இருக்கிறார். மேலும் முன்னதாக பாத்ரூமில் ஏடிகே உடன் இணைந்து ஜிபி முத்து டான்ஸ் பிராக்டீஸ் செய்திருக்கிறார் மேலும் ஜிபி முத்துவிற்கு எப்படி எப்படி நடனம் ஆடினால் நன்றாக இருக்கும் என ஏடிகே பயிற்சி கொடுத்திருக்கிறார்.
ஆனால் அவரையே மிஞ்சும் அளவிற்கு நடனமாடி அதிரடியாக வெற்றி பெற்றிருக்கிறார் ஜிபி முத்து. எதுவுமே தெரியாது எனக்கூறி வரும் ஜிபி முத்து மேடை ஏறிய பிறகு சரவெடி போல் நடனமாட அனைவரும் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள். மேலும் இவருடைய நடனம் ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது.