பிரபல நடிகையின் மீது போலீசில் புகார் கொடுத்த பிக்பாஸ் சினேகன்.! வைரலாகும் தகவல்

Snegan

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் தமிழ், ஹிந்தி,மலையாளம் என தொடர்ந்து பல மொழிகளிலும் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சி தான் பிக் பாஸ்.இந்நிகழ்ச்சியை சினிமாவில் சரியாக பிரபலமடைய முடியாமல் இருந்து வரும் பலருக்கும் நல்ல ஒரு வாய்ப்பாக இருந்து வருகிறது.

இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர்கள் தற்பொழுது தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பைப் பெற்று வருகிறார்கள்.அந்த வகையில் தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் தான் சினேகன். தற்பொழுது நடிகர் சினேகன் பிரபல சீரியல் நடிகையின் மீது புகார் அளித்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவுள்ளது.

இவர் சிறந்த கவிஞர் என்பது குறிப்பிடத்தக்கது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பொழுது இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமலஹாசனின் மீது இவருக்கு பற்று ஏற்பட்டதால் கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியில் பொறுப்பிலிருந்து வருகிறார்.

இவர் நடிகை கனிகா ரவியை சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கமலஹாசன் முன்னிலையில் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சினேகன் நேற்று சென்னை போலீஸ் ஸ்டேஷனில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதாவது நான் 2015ஆம் ஆண்டு முதல் சினேகன் பவுண்டேஷன் என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறேன்.

அதன் பெயரை பயன்படுத்தி சீரியல் நடிகை ஜெயலட்சுமி மோசடி செய்து வருவதாக புகார் அளித்துள்ளார். ஜெயலக்ஷ்மி பாஜகவில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சினேகன் பவுண்டேஷன் பெயரில் சோசியல் மீடியாவில் பணம் வசூலித்து ஏமாற்றி வருகிறார்.

jayalekshmi
jayalekshmi

இதன் காரணமாக அவருக்கு வக்கில் நோட்டீஸ் அனுப்பினேன் ஆனால் அவர் தவறான முகவரி என மீண்டும் அனுப்பி விட்டார். இப்படி மோசடி செய்யும் ஜெயலக்ஷ்மி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரில் புகார் அளித்துள்ளார் நடிகர் சினேகன்.