Bigg Boss season 7 Voting List: கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இரண்டு வாரங்களை கடந்துள்ளது மேலும் தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே போட்டியாளர்கள் நீ நான் என போட்டி போட்டு வருகிறார்கள். அப்படி வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடுக்காக ரசிகர்கள் ஐந்து நாட்களாக காத்து வருவது வழக்கம்.
அப்படி இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமைக்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து வருகின்றனர். ஏனென்றால் ஸ்மால் பாக்ஸ் வீட்டில் இருக்கும் மாயா தனக்கான ஒரு கேங்கை உருவாக்கிக் கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஹவுஸ்மேட்ஸ்களை படாத பாடு படுத்தி வந்தார். மேலும் நாரத வேலையும் பார்க்க ஆரம்பித்ததால் இவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் என ஏராளமான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
அதாவது இந்த வாரம் நாமினேஷனில் விஷ்ணு, பூர்ணிமா, மாயா, விசித்ரா, பிரதீப் ஆண்டனி, அக்ஷயா, ஜோவிகா உள்ளிட்ட 6 போட்டியாளர்களுக்கும் மக்கள் அளித்திருக்கும் ஓட்டிக் லிஸ்ட் வெளியாகி உள்ளது. அதன்படி அதிகமாக வாக்குகளை பெற்று முதலிடத்தில் பிரதீப் உள்ளார்.
இவருக்கு அடுத்ததாக அக்ஷயா, ஜோவிகா, விசித்ரா, விஷ்ணு ஆகியவர்கள் அடுத்தடுத்த இடத்தினை வைத்துள்ளனர். இவர்களை அடுத்து கடைசியாக பூர்ணிமா மற்றும் மாயா ஆகிய இருவரும் தான் இருக்கிறார்கள். இவர்களுக்குள் 2 சதவீத ஓட்டு வித்தியாசம் மட்டுமே இருக்கிறது. எனவே இவர்களில் ஒருவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறு அதிக வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் ஸ்மால் பாக்ஸ் வீட்டில் இருப்பதனால் பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களை படாத பாடு படுத்திய மாயா தான் வெளியே போக வேண்டும் என கூறுகின்றனர். ஆனால் முதல் வாரமே அனன்யா வெளியானதனை அடுத்து அடுத்த நாளே பவா செல்லத்துரை உடல் நலக்குறைவினால் திடீரென வெளியேறினார். எனவே எலிமினேஷன் நடைபெறப் போவதில்லை. பவா செல்லதுரை மட்டும் வெளியே போகாமல் இருந்து இருந்தால் கண்டிப்பாக மாயா தான் வெளியேறியிருப்பார்.