Bigg Boss 7: கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 7வது நிகழ்ச்சி தொடங்கப்பட்டிருக்கும் நிலையில் விறுவிறுப்பான எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இதற்கு முன்பு ஏராளமான பிரபலங்கள் பிரபலமடைந்து இருந்தாலும் நீங்கா இடத்தை பிடித்துள்ள போட்டியாளர்களில் ஒருவர் தான் வனிதா விஜயகுமார்.
பிக்பாஸ் வீட்டில் இவர் செய்த சம்பவங்களை தற்பொழுது வரையிலும் ரசிகர்களால் மறக்க முடியாது அந்த அளவிற்கு ஏராளமான பிரச்சனைகளை செய்தார். அப்படி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வந்த வனிதா தனது மகள் ஜோவிகாவையும் ரசிகர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
அந்த வகையில் தற்பொழுது தனது மகள் ஜோதிகாவை பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக களம் இறக்கி உள்ளார். மூன்றாவது நாளாக சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கும் இந்நிகழ்ச்சியில் வாக்குவாதங்கள், மோதல்கள் போன்றவை நடைபெற்று வருகிறது.
அப்படி தற்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சியின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் ஸ்கூல் சுரேஷ் கேமரா பார்த்து பேசிக்கொண்டே இருக்க சத்தம் வந்ததால் திடீரென சைலன்ஸ் என்று கோபப்படுகிறார். எனவே இதனால் கத்தி பேச பக்கத்தில் இருந்த சக போட்டியாளர்கள் அனைவரும் ஒரு நொடி பயந்து விடுகிறார்கள் ஆனால் வனிதா மகள் ஜோவிகா கொஞ்சம் கூட அசராமல் சாப்பிட்டுக் கொண்டேன் கூல் சுரேஷை பார்க்கிறார்.
பொதுவாக திடீரென ஒரு சத்தம் வந்தால் பயப்படுவது வழக்கம் ஆனால் ஜோவிகா எந்த ஒரு பயமும் இல்லாமல் கூல் சுரேஷை கூலாக பார்க்க இதனைப் பார்த்த ரசிகர்கள் வனிதா மகள்னா சும்மாவா என கமெண்ட் செய்து வருகின்றனர் இதோ அந்த வீடியோ.
— Sekar Str (@imsekarstr) October 3, 2023