Bigg Boss season 7 today promo 2: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நாமினேஷனில் சிக்கி இருக்கும் போட்டியாளர்கள் குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 6 சீசன்களை விட 7வது சீசன் மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.
9 ஆண் போட்டியாளர்கள் 9 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் தற்பொழுது 16 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். இந்நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்தில் மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று அனன்யா வெளியேறினார்.
இவரை அடுத்து உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் திடீரென பவா செல்லதுரை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் திங்கள் கிழமை அன்று அந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெறுவது வழக்கம்.
நாமினேஷனில் சிக்குபவர்கள் மக்கள் மத்தியில் ஓட்டுக்காக அனுப்பப்பட்டு குறைவான வாக்குகளை பெறுபவர்கள் வாரத்தின் இறுதியில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். நாமினேஷனின் பொழுது எதற்காக அந்த நம்பரை நாமினேஷன் செய்கிறேன் என்பதற்கான காரணத்தையும் கூற வேண்டும்.
அப்படி இந்த வாரம் பல காரணங்களை சொல்லி நாமினேஷன் நடைபெற்று இருக்கிறது அது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது அந்த ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பல போட்டியாளர்கள் முதலில் மாயாவின் பெயரை தான் குறிப்பிடுகின்றனர். இவரை தொடர்ந்து மாயாவுடன் நெருக்கமாக பழகி வரும் பூர்ணிமாவையும் டார்கெட் செய்திருக்கின்றார்கள்.
குறிப்பாக ரவீனா அவரிடம் அழகு இருக்கிற அளவுக்கு அறிவு இல்லை என கூறிய பூர்ணிமாவை நாமினேட் செய்திருக்கிறார். இந்த இருவர்களையும் தொடர்ந்து மூன்றாவதாக பிரதீப் நாமினேஷன் லிஸ்டில் சிக்கி உள்ளார். மேலும் இஷு, மணி சந்திரா, விசித்ரா ஆகியவர்களும் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு மாயா அல்லது பூர்ணிமா இந்த வாரம் எலிமினேட் ஆக அதிக வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.