Bigg Boss season 7 Vichithra: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைத்து சீசன்களிலும் காதல் கிசுகிசுப்பில் ஈடுபட்ட போட்டியாளர்கள் இருந்து வருகின்றனர். அப்படி இந்த சீசனில் காதல் கிசுகிசுப்பில் சிக்கி இருப்பவர்கள் தான் மணி மற்றும் ராவீனா.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் 18 போட்டியாளர்களில் மணி சந்திரா மற்றும் ரவீனா ஆகிய இருவரும் ஏற்கனவே காதலர்கள் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது மேலும் இவர்கள் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலானது.
அப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாள் மணி சந்திராவை பார்த்ததும் ரவீனா நீயுமா இந்த போட்டியில் என்ற ஆச்சரியமுடன் கேட்டிருந்தார். அதோடு மட்டுமல்லாமல் முதல் நாள் பேக் அப் பாடலில் மணி சந்திரா டான்ஸ் ஆடும் போது திடீரென ரவீனா அவரது இடுப்பிலே உட்கார்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவை அனைத்தும் தெரிந்த ஒன்றுதான் இந்த நிலையில் ரவீனா மற்றும் மணி சந்திரா நெருங்கி பழகுவதை பார்த்து விசித்ரா நீங்கள் இரண்டு பேரும் லவ்வரா என்று ஓபன் ஆக கேட்டுள்ளார். இதற்கு ரவீனா இல்லை நாங்கள் இரண்டு பேரும் நண்பர்கள்தான். நீங்கள் பழகும் விதத்தை பார்த்தால் நண்பர்கள் போல் தெரியவில்லை காதலர்கள் போல் தெரிகிறீர்கள்.
அது ஒன்றும் தப்பு இல்லை என்று கூற அதற்கு இருவரும் இல்லை நாங்கள் நண்பர்கள்தான் கொஞ்சம் நெருக்கமான நண்பர்கள் என்று கூறுகின்றனர். இவர்களுக்கே இது அதிர்ச்சியாக அமைந்தது அப்படி பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் காதலர்கள் கிசுகிசுப்பில் மணி மற்றும் ரவீனா சிக்கிவுள்ளனர்.