தண்ணி கொடுக்காம இருக்குறது போராட்டமா.? கிழித்து தொங்க விட்ட கமல்.! வைரலாகும் பிக் பாஸ் ப்ரோமோ

Bigg Boss season 7 today promo 1: பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த வாரம் ஸ்மால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களை நடிகர் கமல் ஹாசன் வலுத்தெடுத்து இருக்கும் ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது.

மேலும் முந்தைய சீசன்களை விட இந்த சீசன் கண்டிப்பாக டிஆர்பி ரேட்டிங்கில் நல்ல இடத்தினை பிடிக்க வேண்டும் என்பதற்காக பல மாற்றங்களுடன் தொடங்கப்பட்டுள்ளது. அப்படி ஆரம்பத்திலேயே ஸ்மால் பாஸ் வீடு, பிக் பாஸ் வீடு என 18 போட்டியாளர்களையும் இரண்டு குழுவாக பிரித்து இருக்கின்றனர். வாரத்தின் இறுதியில் சரியாக வேலை செய்யாதவர்கள், சுவாரசியமாக இல்லாதவர்களை பிக் பாஸ் தேர்வு செய்து ஸ்மால் பாக்ஸ் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார்.

அப்படி ஸ்மால் பாக்ஸ் வீட்டில் இருப்பவர்கள் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு தேவையான உணவுகள் மற்றும் வீட்டு வேலைகளை செய்தாக வேண்டும். அந்த வகையில் இந்த வாரம் மாயா கிருஷ்ணன், விஷ்ணு விஜய், கூல் சுரேஷ், விஜய் வர்மா, ஐஷூ, பிரதீப் ஆண்டனி ஆகியோர்கள் ஸ்மால் பாக்ஸ் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். அப்படி விதியின்படி பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு தேவையான உணவுகளை சமைத்துக் கொடுத்தே ஆக வேண்டும்.

ஆனால் சில தினங்களுக்கு முன்னர் உணவு சமைத்துக் கொடுக்க முடியாது என ஸ்மால் பாக்ஸ் விட்டு ஹவுஸ்மேட்ஸ்கள் போராட்டம் நடத்தினர். அதேபோல் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு தண்ணீர் கூட கொடுக்காமல் நடந்து கொண்டனர் எனவே இதனால் கடுப்பான பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்கள் தாங்கள் வாங்கி வந்த பொருட்களை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு பதிலடி கொடுத்தார்கள்.

இவ்வாறு இவர்களுக்கு இடையே பல போராட்டங்களுக்கு பிறகு தான் ஸ்மால் பாஸ் வீட்டுக்காரர்கள் தங்களது போராட்டத்தை நிறுத்தினர். இந்நிலையில் இன்று ஸ்மால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களை கமலஹாசன் கவனித்திருக்கிறார். அது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.

கமல் கூறியதாவது, ஒரு புரட்சி போராட்டம் செஞ்சீங்க தண்ணிய கூட கொடுக்காமல் இருந்ததை ஸ்ட்ரைக் இன்னும் சொல்ல முடியாது. ஸ்ட்ரைக் பண்ணியது நியாயமா நியாயம் இல்லையாங்குறது கேள்வி அல்ல நியாயத்துக்காக தான் நீங்க ஸ்ட்ரைக்கே பண்றீங்க அதுல ஒரு நியாயம் இருக்க வேண்டாமா முன்னறிவிப்பு இருக்கணும்.

நீங்க அநியாயம் பண்றீங்க நாங்க நியாயமா கொடுக்க வேண்டியது எதுக்கு கொடுக்கணும் என்று கேள்வி மேல் கேள்வி கேட்க ஸ்மால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்கள் முழித்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு இதனை வைத்து பார்க்கும் பொழுது இன்று ஸ்மால் பாஸ் வீட்டுக்காரர்களுக்கு தரமான சம்பவம் இருக்கிறது.