Bigg Boss 7: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் நாளுக்கு நாள் போட்டியாளர்கள் மத்தியில் போட்டிகள் பயங்கரமாக இருந்து வருகிறது. மேலும் அடிக்கடி போட்டியாளர்கள் சண்டை போடுவதையும் வழக்கமாக வைத்திருப்பதனை பார்த்து வருகிறோம்.
அப்படி விசித்ரா, ஜோவிகா இவர்களுடைய பிரச்சனையை இந்த வாரம் கமலஹாசன் தீர்த்து வைத்தார் இதனை அடுத்து இன்றைய முதல் ப்ரோமோவில் விஷ்ணு மற்றும் சக போட்டியாளர் மணி சந்திராவுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதாவது விஷ்ணுவை ‘ஏய்’ என மணிச்சந்திரா கூற என்னை ‘ஏய்’ என்று கூப்பிடுகிறாய் என்று விஷ்ணு கேட்க நான் ஏய் என்று கூறவில்லை டேய் என்றுதான் கூப்பிட்டேன் என்கிறார்.
அது எப்படி நீ என்னை டேய் என்று கூப்பிடலாம் என்னுடைய பெயரை சொல்லி கூப்பிடு என விஷ்ணு வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். இதனை அடுத்து போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்து ஆலோசனை செய்து கொண்டிருக்கும் நிலையில் இந்தவார கேப்டன் ஆக தேர்வு செய்யப்பட்டிருக்கும் சரவண விக்ரமிடம் விஷ்ணு சண்டைக்கு போகிறார்.
அதாவது சரவணன் விக்ரமிடம் இங்கே வந்து நீங்கள் கேப்டனா? இல்லை 11 பேரும் கேப்டனா? இப்போ உங்ககிட்ட ஆளுமை இல்லையா? என்று கேட்கிறார். இதற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக சரவண விக்ரம் இருக்க உடனே பிரதீப் அதை நீங்கள் சொல்லாதீர்கள் என சொல்ல அப்படி எல்லாம் பண்ண முடியாது இங்க டீமா பேசும் பொழுது டீமா தான் பேச வேண்டும் என்று கூறுகிறார்.
அப்பனா அதை கேப்டன் சொல்லட்டும், நீ சொல்ல வேண்டாம் என்று பிரதீப் கூற நான் சொல்லுவேன் உனக்கு கேமே ஆடத் தெரியவில்லை நீ எல்லாம் பேசாதே என்று வாயை மூட வைக்க இதனால் இவர்களுக்கிடையே பஞ்சாயத்து ஏற்படுகிறது.