தனது படிப்பு குறித்து பேசியதால் விசித்ராவை கிழித்து தொங்கவிட்ட ஜோவிகா.. வனிதா மகள்னா சும்மாவா.!!

Jovika Vijaykumar vichithra
Jovika Vijaykumar vichithra

Bigg Boss 7: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 7 தொடங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமாரின் மகளும் போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கி இருக்கும் நிலையில் தற்போது தனது அம்மா போலவே தைரியமாக பேசும் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது.

எத்தனை வருடங்கள் சென்றாலும் பிக்பாஸ் போட்டியாளர்களில் மறக்க முடியாத ஒரு நபர்தான் வனிதா விஜயகுமார் அந்த அளவிற்கு நிகழ்ச்சியில் ஒரு கலக்கு கலக்கினார். இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அப்படி சோசியல் மீடியாவின் மூலம் தனது மகள் ஜோதிகாவையும் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய நிலையில் தற்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற வைத்துள்ளார். சமீப பேட்டியில் வனிதாவிடம் உங்கள் மகள் மிகவும் அமைதியாக இருப்பதாக கூறினர் இதற்கு பதில் அளித்த வனிதா அது ஒரு வித்தியாசமான கேரக்டர் பொறுத்து பாருங்க உங்களுக்கும் பிடிக்கும் என தெரிவித்தார்.

இந்த சூழலில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் விசித்ராவிடம் கொதித்தெழுந்துள்ளார். அதாவது இதற்கு முன்பு நடந்த டாஸ்க்கில் தனக்கு சரியாக படிப்ப வராத காரணத்தினால் 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுதே படிப்பை நிறுத்தி விட்டதாக கூறி கண்கலங்கினார். இந்த டாஸ்க்கின் போது ஜோவிகாவிடம் பள்ளியில் படிக்கும் அடிப்படையான கல்வி என்பது முக்கியமானது என பேசினார்.

இதனால் கடுப்பான ஜோவிகா எல்லாரும் படிச்சு பெரிய ஆள் ஆகணும்னு இல்ல என கூறினார் அதாவது விசித்ராவிடம் படிக்கிற விஷயத்துல நிறைய குழந்தைகள் தப்பான இதுல போகுது அவர்கள் சார்பாக நான் தான் இங்கு வந்திருக்கிறேன் என கூறியுள்ளார். நீ என்ன வேண்டுமானாலும் பேசுறது கருத்து சுதந்திரம் இல்லை என விசித்ரா கூறி மேலும் டென்ஷனான ஜோவிகா நான் தப்பா ஏதாவது சொன்னா நான் பேசிக்கிட்டு இருக்கேன் சைலன்டா இருங்கன்னு விசித்ராவை சவுண்டு விடுகிறார்.

ஜோவிகாவின் பேச்சில் நியாயம் இருந்ததால் ரவீனா, பாவா செல்லதுரை ஆகியோர் கைதட்டுகின்றனர் அதேபோல் விசித்ரா தன்னை நீ கண்டிப்பா 12ம் வகுப்பு படிக்க வேண்டும் என்பதை சுட்டி காட்டியதாகவும் அதற்காக வேண்டுமானால் குறும்படம் போட சொல்வதாகவும் கூறினார்.

மேலும் என்ன பத்தி என்ன வேண்டுமானாலும் பேசு என் ஃபேமிலியை பத்தி பேசாத என் அம்மாவோ, என் அப்பாவோ, என் தாத்தாவும் இங்க வரல என விசித்ராவிடம் பயங்கர போல்டாக பேச ஒட்டுமொத்த போட்டியாளர்களும் வாயடைக்க போய் பார்க்கின்றனர்.