எச்சில் துப்பறத நான் தான் கையால எடுத்துப் போடுறேன்.. புதிய பிரச்சினையை கிளப்பிய பிரதீப்.! பல்பு கொடுத்த பவா

bigg boss 7 season
bigg boss 7 season

Bigg Boss 7: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து விறுவிறுப்பான எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது. அப்படி பிக்பாஸ் வீட்டில் பிரதீப் ஆண்டனியும், கதை சொல்லியுமான பவா செல்லத்துரைக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதாவது கதை சொல்லியும், எழுத்தாளருமான பவா செல்லதுரை எச்சில் துப்புவதாக சக போட்டியாளர் பிரதீப் ஆண்டனி பிரச்சனையை கிளப்பி உள்ளார். அப்படி அவர் பவாவிடம் கண்கலங்கி பேசும் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதாவது போட்டியாளர்கள் அனைவரையும் ஒன்றாக அழைத்து உட்கார வைத்துக் கொண்டு பவா செல்லத்துரை இடம் பிரதீப் பேசுகிறார்.

அவர் கூறுகையில், தனிப்பட்ட முறையில் உங்களிடம் ஒரு விஷயம் சொல்ல நினைக்கிறேன் நான் உங்களை ஒரு குரு மாதிரி தான் பார்க்கிறேன் நீங்க சில இடங்களில் எச்சில் துப்புறீங்க, நகம் கடித்து போடுறீங்க.

இதைக் காரணம் காட்டி உங்களை வீட்டை விட்டு அனுப்பி விட்டால் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது இது ஒரு மேடை நீங்கள் எச்சியில் துப்பும் போது நான் தான் அதை கை வைத்து எடுக்கிறேன் நான் உங்களை காப்பாற்ற வரவில்லை ஜெயிக்க வந்துள்ளேன்.

நீங்கள் என்னுடன் இருக்க வேண்டும் என நினைக்கிறேன் என பிரதீப் கூற இதற்கு பதில் அளிக்கும் பவா செல்லதுரை என்னுடைய இயல்பை எதற்காகவும் மாற்றிக் கொள்ள மாட்டேன் பிக்பாஸ், கடவுள் என யார் கேட்டாலும் மாற மாட்டேன் நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வர காரணம் வெளியே எனக்கும் பெரிய எழுத்தாளர், கதை சொல்பவர், எல்லோரிடமும் வயது வித்தியாசம் இல்லாமல் பழகுபவன் என்று ஒரு பெயர் இருக்கு தமிழ்நாட்டில் உங்கள் வயதில் எனக்கு 1000 ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சுக்கு மூலமாக என்னுடைய நெகட்டிவ் பக்கம் வெளியே வந்தால் சந்தோஷப்படும் முதல் ஆல் நான் தான் என கூறியுள்ளார்.