Bigg Boss season 7 today promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து போட்டியாளர்களும் அடித்துக் கொள்ளாத ஒரு குறையாக வாய் தகராறு செய்து வருகின்றனர். அப்படி தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் நிக்சன் மற்றும் பிரதீப் இருவரும் பயங்கரமாக சண்டை போட்டுக் கொள்கின்றனர்.
கடந்த சீசன்கள் சுவாரஸ்யம் பெரிதாக இல்லாததால் டிஆர்பி ரேட்டிங் உயரவில்லை எனவே இந்த சீசனை தரமான முறையில் உருவாக்கியுள்ளனர். ஸ்மால் பாஸ் வீடு, பிக் பாஸ் வீடியோ என போட்டியாளர்களை பிரிக்க இதனால் போட்டியாளர்களுக்கு மத்தியில் கடும் சண்டை நிலவி வருகிறது.
அதன்படி தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் நிக்சன் மற்றும் பிரதீப் ஆகிய இருவரும் ஆவேசமாக மோதிக் கொள்ளும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதாவது எனக்கு பேச தகுதி இல்லை என்று நீ எப்படி சொல்லலாம்? நீ யார் என்னை அவ்வாறு பேச? உழைத்து பாட்டு பாடி கஷ்டப்பட்டு நான் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கிறேன். என்னை பார்த்து தகுதி இல்லை என்று சொல்வதற்கு உனக்கு தகுதியே கிடையாது என பிரதீப்பை நிக்சன் கூறுகிறார்.
மேலும் நீ இந்த கேமை பக்காவா புரிஞ்சுகிட்டு தந்திரத்துடன் தான் இங்கே வந்திருக்கிறாய். கேவலமான தந்திரத்துடன் விளையாடி இந்த கேமை ஜெயிக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் எனக்கு இல்லை உன்கிட்ட திறமை இல்லை ஆனால் என்கிட்ட திறமை இருக்கு என்று நிக்சன் கூற உடனே பிரதீப் பாடி காட்டு என்று கேட்க பாடி காட்டு, ஆடி காட்டு என்றெல்லாம் கூறுவதற்கு உனக்கு எந்த தகுதியும் இல்லை உனக்கு வரலையா மூடிக்கிட்டு உட்காரு என்று கூற இவ்வாறு நிக்சன் பேசியதை ஆச்சரியமடைந்து பிரதீப் பார்த்துக் கொண்டிருக்கும் ப்ரோமோ தான் வெளியாகி உள்ளது. இவ்வாறு இந்த வாரம் அனைத்து போட்டியாளர்களுக்கும் ஆண்டவர் தரமான பதில் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.