அசிங்கமாயிடுமோனு பயம்.. இதன் காரணத்தினால் தான் பேசவில்லை.! கமல் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த ராபர்ட் மாஸ்டர்..

bigg-boss-6
bigg-boss-6

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்போது இன்றைய நாளின் இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ள நிலையில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது அதில் கமல் தனக்கென்று சொந்தமாக யோசனை இல்லாமல் செயல்படும் போட்டியாளர் யார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என ஒவ்வொரு போட்டியாளரிடமும் கமல் கேட்கிறார்.

அந்த வகையில் அதற்கு பதில் அளித்த அசீம் ராபர்ட் மாஸ்டரை கூறியுள்ளார் அதற்கு முக்கிய காரணமாக அமுதவாணன் தான் ராபர்ட் மாஸ்டரை செயல்படுத்துகிறார் என கூறியிருக்கும் நிலையில் இதனைக் கேட்டவுடன் கடுப்பாகிறார் ராபர்ட் மாஸ்டர். இதற்கு பதில் அளித்த ராபர்ட் மாஸ்டர் நான் எல்லாரிடமும் தான் பேசுகிறேன் அசின் இடம் மட்டும் தான் பெரிதாக பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளவில்லை

ஏனென்றால் அசின் எனும் துப்பாக்கி எப்பொழுதும் என் பக்கம் திரும்பி விடுமோ என்றோம் பயமாக இருக்கிறது அசிங்கமாய் விடுமோ என்று எண்ணித்தான் அவரிடம் பேசவில்லை என விளக்கம் அளிக்கிறார். இவ்வாறு ராபர்ட் மாஸ்டர் கூறியது அசிமீருக்கு மிகுந்த மன வருத்தத்தை தந்திருக்கிறது.

ஏனென்றால் நேற்று கமல் உட்பட போட்டியாளர்கள் அனைவரும் அசீமை கிழித்து தொங்க விட்ட நிலையில் தொடர்ந்து அவரை அனைவரும் டாமினேட் செய்து வருகிறார்கள் இதன் காரணமாக அசீமும் இதற்கு மேலாவது திருந்தி என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த பிக்பாஸ் வீட்டில் இருந்து மூன்றாவது போட்டியாளராக அசல் கோளாறு வெளியேறியிருக்கிறார் இதனைத் தொடர்ந்து இவருக்கு முன்பு முதல் போட்டியாளராக சாந்தி வெளியானார். மேலும் ஜி பி முத்து தன்னுடைய மகனை பார்க்க வேண்டும் என படம் பிடித்து வெளியேறி நிலையில் மூன்றாவதாக தற்போது அசல் கோளாறு வெளியேறி இருக்கிறார்.

இவ்வாறு தொடர்ந்து எதிர்பாராத வகையில் பல திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் அனைத்து போட்டியாளர்களும் தங்களுடைய சிறந்த விளையாட்டு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். யார் இந்த போட்டியில் ஜெயிப்பார் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.