உங்களை விமர்சிக்கவில்லை.. கண்டிக்கிறேன் என அசீமை வெளுத்து வாங்கிய கமல்.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த மூன்று வாரங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த வாரம் நீயும் பொம்மை.. நானும் பொம்மை டாஸ்க் நடைபெற்றது. இதில் அனைத்து போட்டியாளர்களும் தங்களுடைய சிறந்த விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி இருந்தார்கள்.

மேலும் சர்ச்சைக்குரிய சண்டைகளும் நிகழ்ந்தது இப்படிப்பட்ட நிலையில் இந்த போட்டியின் பொழுது யார் மீது தவறு என தெரியாமல் ஒருவரை ஒருவர் மாற்றி குறை சொல்லிக் கொண்டு சண்டை போட்டு வருகிறார்கள். எனவே பிக்பாஸ் போட்டியாளர்கள் உட்பட ரசிகர்கள் வரை அனைவரும் கமலஹாசன் அவர்களின் வருகைக்காக காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் கடந்த வாரம் அசீம் ஆயிஷாவை வாடி போடி என பேசி பெரிய பிரச்சனையானது. எனவே இதனை கமலஹாசன் அவர்கள் கண்டித்தார் இதனை தொடர்ந்து அசீம் இந்த வாரம் தனலட்சுமியிடம் சண்டை போட்டு இருக்கிறார். ஷிவின் உள்ளிட்ட பலரது பாடி லாங்குவேஜ்யும் செய்து காட்டி கலாய்த்து இருக்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்கு வந்திருக்கும் கமல் அசீமை கடுமையாக எச்சரிக்கிறார். அதில் அவர் கூறுகையில் நான் உங்களிடம் எதையும் கேட்க விரும்பவில்லை நீங்க என்ன சொல்ல போறீங்கன்னு எனக்கு தெரியும் நான் விமர்சிக்கல கண்டிக்கிறேன் என கூற அதிர்ச்சியடைகிறார். இந்த வாரம் ஆக மொத்தத்துல அசீமை வைத்து இந்த  அந்த ப்ரோமோ தான் தற்பொழுது வெளியாகி இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் இந்த வாரம் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் அசல் கோளாறு வெளியேறுகிறார் இவரைத் தொடர்ந்து அசீமுக்கும் ரெக்கார்ட் கொடுத்து வெளியில அனுப்ப அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்த ஏராளமான சர்ச்சைக்குரிய விஷயங்கள் நடந்து வரும் நிலையில் அடுத்தடுத்து யார் வெளியேறுவார் என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.