விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்பொழுது மூன்றாவது வாரத்தை கடந்துள்ள நிலையில் அதற்குள் ஏராளமான சண்டை சச்சரவுகள் அரங்கேரி வருகிறது. மேலும் இந்த வாரம் முழுவதும் நீயும் பொம்மை.. நானும் பொம்மை டாஸ்க் நடைபெற்றது அந்த டாஸ்க் நேற்றோடு நிறைவு பெற்றுள்ளது.
மேலும் இந்த டாஸ்கின் பொழுது ஏராளமான பிரச்சனைகள் ஏற்பட்டது மேலும் யாரின் மீது தவறு இருக்கிறது இல்லை என தெரியாமல் ஒருவரின் மீது ஒருவர் பழியை போட்டு வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் நடிகர் கமலஹாசன் அவர்கள் இன்று இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார் அது குறித்த ப்ரோமக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வகையில் ஷெரினா கீழே விழுந்த நிலையில் அனைவரும் தனலட்சுமி தான் அவரை கீழே தள்ளிவிட்டார் என கூறி வந்தார்கள் மேலும் பலரும் தனலட்சுமியிடம் சண்டை போட்டு வந்த நிலையில் இது குறித்து கமலஹாசன் அவர்கள் குறும்படம் போட்டுள்ளார் அதில் தனலட்சுமி என் மீது எந்த தவறும் இல்லை என தெரிய வருகிறது.
மேலும் கடந்த வாரம் கமலஹாசன் அவர்கள் அசீமை கண்டித்து வைத்திருந்த நிலையில் கொஞ்சம் கூட மாத்திக்காமல் இந்த வாரமும் அதுபோன்றே நடந்து வருகிறார் அனைவரிடமும் மரியாதை குறைவாக நடந்து வரும் நிலையில் இன்று அசீமை வச்சி செய்ய இருக்கிறார் கமலஹாசன்.
இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் அமுதவாணனுக்கு பேய் பிடிப்பது போன்ற நாடகம் நடத்தப்படுகிறது. அதில் அமுதாவும் அண்ணனுக்கு ஏற்கனவே பேய் பிடித்ததாக சக போட்டியாளர்கள் பேசி வரும் நிலையில் திடீரென அமுதவாணன் பாத்ரூமில் பேய் பிடித்தது போன்று படுத்து கொள்கிறார் பிறகு அனைவரும் அவரை தூக்கி கொண்டு பெட்டில் படுக்க வைக்கிறார்கள்.
பிறகு பெட்டியில் இருந்து எழுந்த அமுதவாணன் தன்னுடைய கண்களை பேய் பேன்று வைத்துக்கொண்ட தனலட்சுமியை பயமுறுத்துகிறார். அலறி அடித்துக் கொண்டு ஓடும் தனலட்சுமி பிக்பாஸின் கதவைத் தட்டி திறங்கள் நான் வீட்டிற்கு செல்கிறேன் என அலறுகிறார் மேலும் மிகவும் பதட்டம் அடைய பிறகு ஷிவின் தனலட்சுமியை கட்டிப்பிடித்துக் கொண்டு ஒன்றுமில்லை என கூறுகிறார் பிறகு அனைத்து போட்டியாளர்களும் ஒன்றிணைத்து இது சும்மா டிராமா தான் என உணர்த்துகிறார்கள் ஆனால் மரண பீதியில் தனலட்சுமி இருந்து வருகிறார்.