விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் யார் வெளியே ஏற போகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் இந்த வாரம் நீயும் பொம்மை.. நானும் பொம்மை டாஸ்க் நடைபெற்ற நிலையில் இதில் ஏராளமான பிரச்சனைகள் ஏற்பட்டது.
இப்படிப்பட்ட நிலையில் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் அதிக அளவில் சண்டை போட்டு வந்த நிலையில் அனைவருக்கும் உண்மையை தெரிவிக்க வேண்டும் பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக கமலின் வருகைக்காக பிக்பாஸ் போட்டியாளர்கள் உட்பட அனைத்து ரசிகர்களும் மிகவும் ஆர்வமாக காத்து வருகிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது நடிகர் கமலின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சியை மிகவும் பரபரப்பாகவும், விறுவிறுப்புடனும் நடத்தி வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த சீசன் அறிமுகமாகி இரண்டு வாரங்களை கடந்த நிலையில் தற்பொழுது மூன்றாவது வாரம் ஒளிபரப்பாகி வந்தது. எனவே கடந்த இரண்டு வாரங்களை விட இந்த வாரம் பெரிதளவில் சண்டை வெடித்தது.
அதிலும் குறிப்பாக அசீம் தனலட்சுமி, அமுதவாணன், ஷிவின் என நிறைய பேருடன் சண்டை போட்டார் எனவே ஷிவினை தரைகுறைவாக கிண்டல் அடித்தது, அமுதவாணனிடம் திமிராக பேசியது போன்றவை போட்டியாளர்களையும் கடுப்பேற்றியது. எனவே தற்பொழுது அசீமுக்கு ரெக் கார்டு கொடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் தற்பொழுது வெளியாகியுள்ள ப்ரோமாவில் கமல் பேசுகையில் ‘என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியும்.. எனக்கும் தெரியும்.. ஆனால் உள்ள இருக்கிறவங்களுக்கு தெரிய மாட்டேங்குதே.. பழி போடுகிறது ஈசி.. பழைய தாங்குவது கஷ்டம் அதை அவங்களுக்கு புரிய வைக்கணும் சில பேரை காப்பாற்றியாகணும், சில பேரை யாராலும் காப்பாற்ற முடியாது என கமல் பேசும் ப்ரோமோ தற்பொழுது வெளியாகி இருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக அசீமுக்கு ரெட் கார்டு கொடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறி வருகிறார்கள்.