தொடர்ந்து பல சண்டைகளுக்கு பிறகு மிகவும் சந்தோஷமாக இருக்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள்.! வைரலாகும் வீடியோ..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சில நாட்களாக நீயும் பொம்மை.. நானும் பொம்மை டாஸ்க் நடைபெற்று வருகிறது இதனால் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் ஏராளமான சர்ச்சைகளுடன் சண்டை போட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மேலும் இந்த டாஸ்கின் மூலம் பலரின் உண்மையான முகமும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு தொடர்ந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது சில குஷியான காட்சிகள் வெளியாகி இருக்கிறது அந்த வகையில் ஷெரினா போலவே பாட்டு பாடி ஆட்டம் போடும் குயின்சியின் வீடியோ தான் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது குயின்சி ஷெரினா போலவே நடனமாடி அவரை கிண்டல் செய்கிறார் இதனை பார்த்து சிரிக்கும் ஷெரினா போதும் நிறுத்து என்று கூறிய போதும் குயின்ஷா அதனை கேட்காமல் தொடர்ந்து ஷெரினாவை கிண்டல் செய்து வருகிறார்.

பிறகு குயின்ஸ் உடன் இணைந்து மகேஸ்வரியும் சேர்ந்து ஷெரினாவைக் கிண்டல் செய்து வருகிறார்கள் ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த ஷெரினா குயின்சியை அடிப்பதற்காக ஓட துரத்துகிறார் ஆனால் அவரிடம் இருந்து பிடிப்படாமல் தப்பித்து விடுகிறார் குயின்சி பிறகு குயின்சியைப் பிடித்து தருமாறு மணிகண்டனிடம் உதவி கேட்கிறார்.

மமணிகண்டன் அப்பொழுதுதான் குளித்துவிட்டு துண்டுடன் வருகிறார் இந்நிலையில் நீங்கள் ஃப்ரிட்ஜில் இருந்து எடுக்கப்பட்ட ஆப்பிள் மாதிரி இருக்கீங்க என குயின்சி அவரை கேலி செய்கிறார் எனவே இதனை தொடர்ந்து குயின்சியைப் பிடிக்க வரும் பொழுது என் அருகே வந்தால் துண்டை அவிழ்த்து விடுவேன் என பயமுறுத்த மணிகண்டன் அந்த இடத்தை விட்டு கிளம்புகிறார் இவ்வாறு இந்த காமெடியான காட்சியை இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் யார் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சி முதல் போட்டியாளரான சாந்தி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் மேலும் இந்த வாரம் அசல் கோளாறு வெளியே செல்ல‌ அதிக வாய்ப்பு இருக்கிறது.