விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்த பல விறுவிறுப்பான டாஸ்வுடன் ஒளிபரப்பாகி வருகிறது மேலும் தொடர்ந்து இவர்களுக்கிடையே ஏராளமான சண்டைகள் நிலவி வரும் நிலையில் தற்போது கடந்த வார டாஸ்க்கில் ஓவராக சீன் போட்டு அனைத்து போட்டியாளர்களால் மோசமாக விளையாடிய போட்டியாளர் என தேர்ந்தெடுக்கப்பட்ட அசீம் ஜெயிலுக்குள் சென்றிடு இருக்கிறார்.
அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நானும் பொம்மை.. நீயும் பொம்மை என்கிற டாஸ்க் மிகவும் விருப்பாக நடைபெற்று வந்தது இந்த டாஸ்க் பிக்பாஸ் வீடு அலங்கோலமானது என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் அந்த அளவிற்கு அடித்துக் கொள்ளாத ஒரு குறையாக விளையாடி வந்தார்கள். மேலும் அனைத்துப் போட்டியாளர்களும் தங்களுடைய சிறந்த விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி வந்தார்கள்.
இந்த டாஸ்க் மூலம் அனைவரின் உண்மையான முகவும் தெரியவந்தது மேலும் சிலருடைய உண்மையான கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது. இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் கடைசியாக அசல் கோளாறு அசீம் பொம்மையையும், அசீம் விக்ரமின் பொம்மையையும் வைத்திருந்தார்கள். பொம்மை வைக்கும் இடத்தில் ஒரு இடம் காலியாக இருந்த நிலையில் ஏதாவது ஒரு பொம்மையை அந்த இடத்தில் வைக்க சொன்னார்கள்.
ஆனால் இருவரும் பொம்மையை வைக்காமல் இந்த போட்டியில் இருந்து அசீம் மற்றும் விக்ரமன் இருவரும் வெளியேறினார்கள். இப்படிப்பட்ட நிலையில் இன்றுடன் இந்த டாஸ்க் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த டாஸ்கின் இறுதியில் சிறப்பாக விளையாடிய போட்டியாளர்கள் யார்? மோசமாக விளையாடிய இரண்டு போட்டியாளர்கள் யார்? என்பதை சக ஹவுஸ் மேட்சுகள் தேர்ந்தெடுக்க வேண்டும் என பிக்பாஸ் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.
அப்படி ஹவுஸ் மேட்ஸ்கள் மோசமாக விளையாடிய போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரையும் ஜெயிலுக்கு அனுப்பி வைத்து இருக்கிறார்கள். அதாவது நீயும் உம்மை.. நானும் பொம்மை டாஸ்க் மிகவும் மோசமாக விளையாடிய ஷிவின் மற்றும் அசீம் இருவரையும் தேர்ந்தெடுத்து ஜெயிலுக்குள் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.