பிரச்சனையை மறந்து ஆயிஷாவிற்காக அசீம் செய்த செயல்.! அதிர்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்கள்..

bigg-boss-06
bigg-boss-06

விஜய் டிவியில் தொடர்ந்து ஏராளமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி தொடங்கி இருக்கிறது மிகவும் சுவாரஸ்யமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீசனில் ஜிபி முத்து மற்றும் சாந்தி இருவரும் வெளியேறியிருக்கிறார்கள். இருந்தாலும் மற்ற போட்டியாளர்கள் மிகவும் விறுவிறுப்பாக தங்களுடைய விளையாட்டை விளையாடி வருகிறார்கள்.

இந்நிலையில் சில நாட்களாக ஆயிஷா மற்றும் அசீம் இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது அதாவது டாஸ்க் ஒன்றில் ஆயிஷாவை மரியாதை குறைவாக வாடி போடி என அசீம் பேசினார். இதனால் பிக்பாஸ் வீடியோ கலவரமானது மேலும் ஆயிஷா அசீமை செருப்பால் அடிப்பேன் எனவும் கூறினார் இவ்வாறு இவர்கள் இடையே சண்டை முத்திப்போக ஒரு கட்டத்தில் அனைத்து ஹவுஸ் மேட்சுகளும் இணைந்து இவர்களை சமாதானப்படுத்தினார்கள்.

மேலும் ஹவுஸ் மேட் அனைவரும் கமலஹாசன் அவர்களின் முன்னணியில் அசீம்க்கு ரெட் கார்டு கொடுத்தனர். இதனால் அசீம் தன்னுடைய தவறை உணர்ந்து அனைவர் முன்பும் ஆயிஷாவிடம் மன்னிப்பு கேட்டார் நேற்று நடந்த நாமினேஷன் டாஸ்கில் அசீம் ஆயிஷாவை நாமினேட் செய்தார் இந்நிலையில் ஆயிஷாவிற்கு உடல் ரீதியாக சில பிரச்சனைகள் இருக்கும் நிலையில் இதனால் நேற்று பிக்பாஸ் வீட்டில் இரண்டு, மூன்று தடவை ஆயிஷா மயக்கம் போட்டு கீழே விழுகிறார்.

குண்டுகட்டாக தூக்கிக் கொண்டு அரிசியும் வருகிறார் இவ்வாறு இவர்களுக்கிடையே கடும் சண்டை நடந்திருந்தாலும் அதனை எல்லாம் பெரிதாக எண்ணாத அசீம் ஆயிஷா மயக்கமான பிறகு காலை சூடேற்றுவதற்காக தடவி கொடுக்கிறார். இவ்வாறு அசீம் செய்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

ஆயிஷாவிற்கு இவ்வாறு உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நிலையில் அவரால் பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து பயணிக்க முடியுமா என்பது ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருந்து வருகிறது இவ்வாறு ஆயிஷாவிற்கு தற்பொழுது மருத்துவர்கள் சிகிச்சை கொடுத்திருக்கும் நிலையில் அவர் தொடர்ந்து வீட்டில் இருக்க முடியுமா என்பதை விரைவில் கூறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.