அசீமை செருப்பை கழட்டி அடிக்க சென்ற ஆயிஷா.! பதட்டமடைந்த போட்டியாளர்கள்..

bigg-boss-6-1
bigg-boss-6-1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினம்தோறும் வெளியாகி வரும் ப்ரோமோக்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பிக்பாஸ் வீட்டில் கடும் போட்டி நிலவி வருகிறது அது ஒரு கட்டத்திற்கு மேல் சந்தை கடை போல் மாறி இருக்கிறது.

மேலும் ஹாட்ஸ்டாரில் இந்த நிகழ்ச்சியை 24 மணி நேரமும் ரசிகர்கள் பார்க்கும் வகையில் ஒளிபரப்பி வருகிறார்கள். மேலும் தொடர்ந்து ஏராளமான சம்பவங்கள் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறி வருகிறது அது அந்த வகையில் இன்று காலையில் அசீம் மற்றும் ஆயிஷா இருவருக்கும் நடந்த சண்டை ஒரு கட்டத்திற்கு மேல் மிகவும் கேவலமாக மாறி இருக்கிறது.

அதாவது பிக்பாஸ் வீட்டில் ரங்கின் அடிப்படையில் போட்டியாளர்களை அனைவரும் நிற்கவைக்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது அதில் ஒன்பதாவது இடத்தில் இருக்கும் ஆயிஷாவை பார்த்து அசீம் இந்த இடத்திற்கு நீ தகுதி இல்லாதவர் வீட்டில் தூங்குவது தவிர நீ வேற என்ன வேலை செய்ற என்று கேட்கிறார் இதனால் கடுப்பா ஆயிஷா நீங்க தூங்குறது கிடையாதா என சண்டை போட ஒரு கட்டத்திற்கு பிறகு அசீம் வாடி போடி என பேசுகிறார்.

என்னதான் இது போட்டியாக இருந்தாலும் மிகவும் தவறான ஒன்று. எனவே அசின் பேசியதால் கடுப்பான ஆயிஷா என்ன வாடி போடின்னு பேசுறீங்க என மிகவும் கோபப்பட்டு ஆக்ரோஷமாக திட்டுகிறார் இருந்தாலும் அடங்காத அசீம் மீண்டும் அதே போல் பேசி வருவதால் இருவருக்கும் இடையே சண்டை முற்றி போய்விடுகிறது. இதனால் சக போட்டியாளர்கள் அனைவரும் இவர்களுடைய சண்டையை நிறுத்த முயற்சிக்கும் நிலையில் அசீம் நிறுத்தாமல் தொடர்ந்து பேசி வருகிறார்.

அசீமை சமாதானப்படுத்த வந்த விக்ரமனை கூட அவர் போடா வாடா என பேசியதோடு மட்டுமல்லாமல் நீ என்ன டானா எனவும் கேட்கிறார். பிறகு ஆயிஷா இவ்வாறு மரியாதை இல்லாமல் பேசாதீங்க எனக் கூற பிறகு அசீம் அப்படி தான் பேசுவேன் என்னடி பண்ணுவ என கேட்கிறார் இதனால் கடுப்பான ஆயிஷா செருப்பை கழட்டி அவரை அடிக்கச் சென்றார். இதனால் போட்டியாளர்கள் அனைவரும் ஆயிஷாவை கட்டுப்படுத்துகிறார்கள் இதனால் கோபமடைந்த அசீம் என்னை எப்படியா அது செருப்பை கழட்டி அடிக்க வரலாம் என கோபப்படுகிறார்.