விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்பொழுது தொடர்ந்து தினம் தோறும் சுவாரசியமான போட்டிகள் நடைபெற்ற வருகிறது. மேலும் ப்ரோமோக்களும் தொடர்ந்து வெளிவர ரசிகர்கள் மத்தியில் பெரிதளவில் அனைத்து ப்ரோமோக்களும் கவர்ந்துள்ளது அதில் தற்பொழுது அனைவரையும் கண்கலங்க வைக்கும் அளவிற்கு உணர்ச்சி பூர்வமாக இருக்கும் ப்ரோமோ தான் வெளியாகி இருக்கிறது.
அதாவது இன்று தன்னுடைய வாழ்வில் நடந்த சம்பவங்களை கதையாக அனைத்து போட்டியாளர்களும் விரைவில் சொல்ல வேண்டும் என்பதுதான் டாஸ். அந்த வகையில் நேற்றைய எபிசோடில் அசிம், ஜனனி, ஜனலட்சுமி, நிவாஷினி, ஏடிகே ஆகியவர்கள் பேசினார்கள். இதனை தொடர்ந்து தற்பொழுது சிவின் கண்கலங்க பேசியுள்ள ப்ரோமோ தான் தற்பொழுது வெளியாகி இருக்கிறது.
இந்த சீசனில் திருநங்கையான சிவின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதற்கான காரணத்தை கூறியுள்ளார். மேலும் என் அம்மா நான் எங்கேயும் சென்று கஷ்டப்படக்கூடாது எனக்கு வேலை கிடைக்காது அதனால் நான் வெளியில் பிச்சை எடுக்கக் கூடாது என்பதற்காக என்னை சிங்கப்பூர் அனுப்பி வைத்தார். என் அம்மா எந்த தப்பும் செய்யல, அதே மாதிரி நானும் எந்த தப்பும் செய்யல ஆனால் என்னோட இந்த பிரச்சனையினால எங்க அம்மாவை விட்டு பிரிந்து இருக்கிற மாதிரி ஆயிடுச்சு.
ஆனாலும் நான் இந்தியா திரும்பி வந்து உன்னை பார்த்துக் கொள்வேன் என்று அம்மாவிடம் சொன்னேன் ஆனால் என் அம்மா அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். பிறகு அம்மா சொல்றத நான் கேட்காத காரணத்தினால் அவர் என்னிடம் பேசுவதையே நிறுத்திவிட்டார். பாசமா இல்லாம, படிப்பும் இல்லாம தனிமையில் தவிச்சுக்கிட்டு இருக்க என்ன மாதிரி இருக்கிறவங்களோட நிலைமை மாற வேண்டும்.
அப்படின்னா என்ன மாதிரி இருக்கிறவங்களோட கதை இந்த சமுதாயத்தில் கேட்கப்பட வேண்டும் என அவர் மிகவும் ஆதங்கத்தோடு தெரிவித்து இருக்கிறார். மேலும் இந்த ஒரு காரணத்திற்காக மட்டும் தான் நான் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தேன் என்று அவர் கண்ணீருடன் கூற போட்டியாளர்கள் அனைவரையும் இது கண்கலங்க வைக்கிறது இவ்வாறு தற்பொழுந்த ப்ரோமோ வெளியாக ரசிகர்கள் தொடர்ந்து தங்களுடைய ஆதரவை அளித்து வருகிறார்கள்.