விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முந்தைய எபிசோடுகளை விட இந்த பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. மேலும் பல மாற்றங்களுடன் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது 20 போட்டியாளர்கள் களமிறங்கி இருக்கிறார்கள் இதன் காரணமாக 40 நாட்களில் நடக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் ஒரே வாரத்தில் நடைபெற்று வருகிறது.
மேலும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வரும் நிலையில் கமலஹாசன் அவர்களும் நேற்று 40 நாள் கழித்து நடப்பதெல்லாம் இந்த சீசன் 4 நாட்களிலேயே நடக்கிறது என கூறியிருந்தார். சண்டை கண்ணீர் என ஒரே பிரச்சினையாக இருக்க ஒருவரை ஒருவர் குறை சொல்கிறார்கள்.
மேலும் ரசிகர்களும் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு ஆதரவளித்து வருகிறார்கள் அந்த வகையில் தற்பொழுது பெரும்பாலும் ஜி பி முத்துவுக்கு தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. இவருடைய எதார்த்தமான பேச்சு ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் மற்ற போட்டியாளர்கள் சிலர் ஜி பி முத்துவை டார்கெட் செய்து வருகிறார்கள் எனவும் ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
அந்த வகையில் தனலட்சுமி மற்றும் ஜிபி முத்துவிற்க இடையே ஏற்பட்ட பிரச்சனை பெரிதளவில் வெடித்தது இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனில் காதல் ஜோடிகள் யார்.? என்று எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது புது போட்டியாளர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்திருக்கிறார். அது வேறு யாருமில்லை விஜய் டிவியில் பல ஆண்டு காலங்களாக பணியாற்றி வரும் மைனா நந்தினி தான்.
தற்பொழுது பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தார். இப்படிப்பட்ட நிலையில் இவர் பிக் பாஸ் ஆரம்பிக்கும் முதல் நாளே வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு வாரம் தாமதமாக வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்திருக்கிறார்.