விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் முந்தைய சீசன்களை விட ஆறாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது மேலும் முதல் நாளிலிருந்து சண்டை பிரச்சனை, கண்ணீர் என ஆரம்பித்த நிலையில் தற்பொழுது அடித்துக்கொள்ளும் அளவிற்கு சண்டை முத்தி போய் உள்ளது.
அந்த வகையில் ஜிபி முத்து மற்றும் தனலட்சுமிக்கு இடையே நடந்த சண்டை மற்றும் ஆயிஷா, அசல் இவர்களுக்கிடையே சண்டை என பல விஷயங்கள் முதல் வாரத்தில் நடந்திருக்கிறது. மேலும் ஒருபுறம் மகேஸ்வரியும் எதற்கெடுத்தாலும் தான் சொல்வதுதான் சரி என்பதைப் போலவே பேசி வரும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கடுப்பினை சம்பாதித்து வருகிறார்.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி சர்ச்சைக்குரிய பிரபலங்களை தான் இந்த சீசனில் அறிமுகப்படுத்தியே இருக்கிறார்கள் எனவே இவர்கள் எதிர்பார்த்தது போலவே முதல் வாரத்திலேயே சண்டை சச்சரவு ஏற்பட்டிருக்கிறது இப்படிப்பட்ட நிலையில் இன்று சனிக்கிழமை என்பதால் கமல் ஷோக்கு வந்திருக்கிறார் அவர் பேசிய ப்ரோமோ தான் தற்போது வெளியாகி உள்ளது.
அதில் அவர் கூறியதாவது நடந்த ஐந்து சீசன்களில் இல்லாத அளவிற்கு 40 நாட்களில் நடக்கக்கூடிய அனைத்து கலாட்டாக்களும் இப்பொழுது தொடங்கி விட்டது, விசாரிப்பதற்கும் கேட்பதற்கும் நிறைய கேள்விகள் இருக்கிறது இன்று இரவு என இவர் கூறும் ப்ரோமோ நிறைவடைகிறது. மேலும் இதனைத் தொடர்ந்து ரக்ஷிதா மேல் கிரஷ் இருப்பதாக கூறும் ராபர்ட் மாஸ்டர் கொஞ்சம் நெருக்கமாக ரக்ஷிதாவிடம் பேசி கொண்டிருக்கிறார்.
இதனை அறிந்த ரக்ஷிதா உடனே புடவை கட்டிக்கொண்டு நெத்தியில் குங்குமம் வைத்துக் கொள்கிறார் இதன் மூலம் தனக்கு திருமணமானதை வெளிப்படுத்துகிறார் இதனால் இவருக்கு திருமணமாகி விட்டதா என அனைவரும் ஆச்சரியப்படுகிறார்கள் பிறகு ரக்ஷிதா எனக்கு திருமணமாகி விட்டதாக கூறுகிறார்.