விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை அன்று கமலஹாசன் தொகுப்பில் மிகவும் பிரம்மாண்டமாக அறிமுகமானது மேலும் இந்நிகழ்ச்சி சென்ற சீசன்களை விட வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக 20 போட்டியாளர்களை களம் இறக்கி உள்ளார்கள் இதில் பலரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர்கள் தான்.
மேலும் இந்நிகழ்ச்சி தொடங்கிய நாளில் இருந்து எந்த ஒரு சண்டையும் இல்லாமல் இருந்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கடும் சண்டையுடன் போட்டி நிலைமை வருகிறது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இரண்டாவது நாளன்று நான்கு அணிகளாக பிரித்து விளையாடு கொண்டிருக்கும் நிலையில் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் இன்று நடக்க இருக்கும் போட்டியில் போட்டியாளர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட இதனால் போட்டியில் சிறிது குழப்பம் ஏற்படுகிறது எனவே ஜி பி முத்துவும் முதல் முறையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிகவும் கோபமாக பேசியுள்ளார்.
அதாவது இந்த வாக்குவாதத்தில் ஈடுபடும் ரட்சிதா திடீரென மைக் முன்பு நின்று மிகவும் வேகமாக சத்தம் போடுகிறார். இதனால் டாஸ்க் என்றால் ஒழுங்காக நடக்க வேண்டும் என்று கத்தினாரா இல்லை என்றால் கோபத்தில் அப்படி கட்டினாரா என்பது இன்றைய முழு எபிசோடு தான் தெரிய வரும்.
இதனைத் தொடர்ந்து மற்றொரு ப்ரோமோவில் மூவி ஜிபி முத்து நாரதர் வேலை பார்க்கிறார் என தனலட்சுமி கேமரா முன்பு கூறுகிறார் இதனால் விரைவில் ஜிபி முத்து மற்றும் மகாலட்சுமிக்கு இடையே சண்டை வர அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனைத் தொடர்ந்து டீ போடுவது, சாம்பார் வைப்பது என அனைத்திற்கும் சண்டை போட்டு வருகிறார்கள்.