விக்ரமன் உள்ளிட்ட அனைத்து போட்டியாளர்களுக்கும் அட்வைஸ் கொடுக்கும் தனலட்சுமி.! வைரலாகும் ப்ரோமோ..

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி 6வது சீசன் 3 வாரங்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் விறுவிறுப்பாக பல சச்சரவான சண்டைகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது தற்பொழுது கிட்டத்தட்ட ஒரு மாதமாக போகும் நிலையில் தற்போது தான் போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியை புரிந்து கொண்டு விளையாட ஆரம்பித்து இருக்கிறார்கள்.

மேலும் 21 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகி வந்த இந்நிகழ்ச்சியில் தற்பொழுது 17 போட்டியாளர்கள் இருந்து வருகிறார்கள். அதுவும் குறிப்பாக விக்ரமன் நிகழ்ச்சியை முழுவதுமாக புரிந்து கொண்டு மிகவும் பக்குவமாக விளையாடி வருவதாக மக்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் பிக பாஸ் நிகழ்ச்சியில் ஆரிக்குப் பிறகு விக்ரமன் தான் எனவும் கூறிவரும் நிலைமை இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் இன்று வைக்கப்பட்ட டாஸ் ஒன்றில் தனலட்சுமி அவர்கள் வெற்றி பெறுகிறார் மேலும் தன்னுடைய ஃப்ரீ அட்வைஸை கொடுக்க வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்படுகிறது. எனவே தனலக்ஷ்மி ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் தன்னுடைய அட்வைஸை கொடுத்து வருகிறார். அப்பொழுது விக்ரமன் அவர்களை கூறும் பொழுது ஒரு விஷயத்தை நீங்கள் பேசும்பொழுது அவருடைய கேரக்டருக்கு இது பொருந்துமா என்பதை புரிந்து கொண்டு பேச வேண்டும் என்று கூறினார்.

அதன் பிறகு ராமுக்கு அவர் அட்வைஸ் கொடுக்கும் பொழுது நான் வேலை செய்யவில்லை என்று சொல்கிறார்கள் ஜெயிலில் வைக்கிறார்கள் என்றும் கூறும் நீங்கள் அதற்கு ஏற்றபடி நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். பிறகு அசீம் பற்றி கூறும் பொழுது நீங்கள் பேச வேண்டும் என்பதற்காக பேசாமல் இரு தரப்பின் கருத்தை கேட்ட பிறகு பேச வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் ஷிவின் பற்றி கூறும் பொழுது முதலில் இறந்த ஆக்டிவான சிவின் தற்போது இல்லை என்று கூறியுள்ளார். இவ்வாறு பிக பாஸ் வீட்டில் இருக்கும் அனைத்து போட்டியாளர்களுக்கும் தனலட்சுமி ஒவ்வொருவராக அட்வைஸ் கொடுத்து வரும் நிலையில் அது குறித்த ப்ரோமோ தற்பொழுது வெளியாகி இருக்கிறது.