இந்த வாரம் யார் யார் நாமினேட் செய்யப்பட்டார்கள் தெரியுமா.? ப்ரோமோ இதோ..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது இப்படிப்பட்ட நிலையில் சில காலங்களாக பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்கும் அனைத்து போட்டியாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய சிறந்த நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

மேலும் முந்தைய சீசன்களை விட இந்த சீசனில் 21 போட்டியாளர்களுடன் களம் இறங்கியது அந்த வகையில் முதல் எலிமினேஷனாக சாந்தி வெளியேறினார். பிறகு ஜி பி முத்து தன்னுடைய மகனின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினாலும் இவரை தொடர்ந்து இரண்டாவது வாரத்தில் அசல் கோளாறு மற்றும் கடைசியாக செரினா உள்ளிட்ட நான்கு பேர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருக்கிறார்கள்.

மேலும் இந்நிலையில் தற்பொழுது 17 போட்டியாளர்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது இப்படி போய்க்கொண்டிருக்கும் நிலையில் வாரம் தோறும் திங்கட்கிழமை அன்று எலிமினேஷன் நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் இந்த வாரம் யார் யார் எலிமினேஷன் செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

அந்த வகையில் இந்த வாரம் ஆயிஷா, தனலட்சுமி, ராம், மகேஸ்வரி, ஆசீம், விக்ரமன் உள்ளிட்ட ஆறு பேர் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதில் ஆயிஷா நடந்து கொள்ளும் விதம் சரியில்லை என்றும் தனலட்சுமியிடம் பேசவே பயமா உள்ளது என்றும் ராம் இன்னும் வீட்டில் உள்ளவர்களுடன் இன்வால் ஆகவில்லை என்றும் அசீம் நக்கலாகவும், திமிராகவும் பேசுகிறார் என்றும் மகேஸ்வரி ரொம்ப ஈஸியா ஒருவரை ரிக்கரெட் செய்கிறார் என்றும் வேலை செய்தாலும் வேலை இல்லை என்று குறை சொல்கிறார் விக்ரமன் என்றும் பல காரணங்களை சொல்லி இந்த வார நாமினேஷன் நடைபெற்றிருக்கிறது.

கடந்த வாரம் ஆயிஷா செரினாவுடன் ஒரு சில வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்றிருந்தார் இப்படிப்பட்டநிலையில் இந்த வாரம் இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற அதிக வாய்ப்பு இருக்கிறது. மேலும் அசீம் இரண்டு வாரங்களாக நன்றாக விளையாடி கமல் கோரிக்கையின்படி நடந்து கொள்ளும் நிலையில் அவர் கண்டிப்பாக இந்நிகழ்ச்சியை விட்டு தற்பொழுது வெளியேற மாட்டார்.