காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட ஜனனி.! அப்பயும் அடங்காமல் திமிர் பிடிச்சு ஆடும் குயின்சி..

jenani
jenani

விஜய் டிவியில் சமீப காலங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தொடர்ந்து ஏராளமான பிரச்சனைகள் அரங்கேறி வருகிறது அந்த வகையில் தற்பொழுது வெளியாகி உள்ள ப்ரோமோ ஒன்றில் ஜெனனி மற்றும் குயின்சி இவர்களுக்கு இடையே இன்று பெரிய பிரச்சனை ஏற்பட இருக்கிறது மேலும் சில நாட்களாக குயின்சியின் நடவடிக்கைகள் ரசிகர்கள் பிடிக்கவில்லை என கருத்துக்கள் கூறி வருகிறார்கள்.

சில வாரங்களாக மிகவும் கடுமையான டாஸ்க்கள் நடைபெற்று வருகிறது எனவே அனைத்து போட்டியாளர்களும் மிகவும் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய சிறந்த விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். எனவே குயின்சி விளையாடுவதில் கவனம் செலுத்தாமல் புரளி பேசுவது, மற்றவர்களை குறை சொல்வது போன்றவற்றை செய்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் ஜெனனி குயின்சியின் காலில் விழும்படியான ப்ரோமோ தற்பொழுது வெளியாகி இருக்கிறது இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஜனனி குயின்சியின் டவலை எடுத்து பயன்படுத்தி விட்டார். இதனால் கடுப்பான குயின்சி ஜனனியை அனைவர் முன்பு மிகவும் கடுமையாக திட்டுகிறார்.

பிறகு ஜனனி தெரியாமல் எடுத்து விட்டேன் என கூறி நீண்ட நேரம் சமாதானப்படுத்த முயற்சித்தும் குயின்சி அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. பிறகு ஜனனி சொல்வதை குயின்சி கேட்கும் நிலைமையில் இல்லை இதன் காரணமாக ஜனனி மன்னிப்பு கேட்டு குயின்சியின் காலில் விழுந்து விடுகிறார்.

அதன் பிறகும் குயின்சி அனைவரிடமும் இதைப்பற்றிய கூறிக் கொண்டிருக்கும் நிலையில் ஆத்திரத்தை தாங்க முடியாமல் ஜனனி தன்னுடைய கையில் இருக்கும் காபி கப்பை போட்டு உடைக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் கடுப்பில் குயின்சியை வன்மையாக கண்டித்து வருகிறார்கள் மேலும் ஜனனியை எப்பொழுதும் இவர் ஏதாவது ஒரு வகையில் சண்டை போட்டுக் கொண்டே வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் எனவும் கூறி உள்ளார்கள்.

ஏனென்றால் ஜனனி சில டாஸ்க்களில் வெற்றி பெற்ற நிலையில் அது குயின்சிக்கு பிடிக்கவில்லை மேலும் பலருக்கும் குயின்சியை பிடித்திருக்கிறது எனவே பொறாமையினால் குயின்சி இவ்வாறு செய்கிறார் இவ்வாறு இந்த புரோமோ தான் தற்போது வெளியாகியிருக்கிறது இதனைப் பற்றி கண்டிப்பாக கமல் அவர்கள் கேட்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.