தனலட்சுமி கூறிய ஒரே வார்த்தையால் போட்டியாளரை சிறைக்கு அனுப்பிய பிக்பாஸ்.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது 6வது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் அனைத்து போட்டியாளர்களும் மிகவும் கடுமையாக விளையாடி வருகிறார்கள் மேலும் தற்பொழுது 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 18 போட்டியாளர்கள் மட்டுமே இருந்து வருகிறார்கள்.

இவ்வாறு அனைவரும் தங்களுடைய சிறந்த விளையாட்டு தன்மையை வெளிப்படுத்தி வரும் நிலையில் தனலட்சுமி சொன்ன ஒரே வார்த்தையால் போட்டியாளர்களில் ஒருவரை பிக்பாஸ் சிறைக்கு அனுப்பி வைத்திருக்கிறார் எனவே போட்டியாளர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

வாரம் வாரம் வெள்ளிக்கிழமை அன்று டாஸ்க் மற்றும் வீட்டில் சரியாக பணிபுரியாத இருவரை சிறைக்கு அனுப்புவது வழக்கம் மேலும் சக போட்டியாளர்கள் அனைவரும் தங்களுடைய மனதிற்கு தோன்றுபவர்களை கூற வேண்டும் அந்த வகையில் இந்த வாரமும் இந்த பழக்கம் மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையில் இந்த வார தொலைக்காட்சி டாஸ்க்கில் மிகவும் மோசமாக விளையாடிய நபர் யார் என தேர்ந்தெடுக்கத்து சொல்ல வேண்டும் என பிக்பாஸ் கூறுகிறார். எனவே முதலாவதாக அசீம் மகேஸ்வரியை மோசமாக விளையாடியதாக கூறுகிறார். இவரை தொடர்ந்து ஏடிகே தனலட்சுமி கூறுவதாகவும் அவர் சுயநலமாக இருப்பதாகவும் தன்னுடைய கருத்தினை முன் வைக்கிறார்.

பிறகு தனலட்சுமி டீமில் சரியாக விளையாடவில்லை என்றால் ராமை தான் கூற வேண்டும் ஏனென்றால் அவர்தான் தன்னுடைய கண் சரியில்லை என கூறிவிட்டு எந்த வேலையும் செய்யாமல் இருக்கிறார் எனக் கூற உடனே ராம் கோபப்படுகிறார். அதற்கு கூறுவதை சரியாக கூறு ஹெல்த் இஷ்யூஸை வைத்து கூறுவது எல்லாம் சரியில்லை. அதற்கு தனலட்சுமி திமிருடன் நான் ஒழுங்காக தான் கூறுகிறேன் என கூற கோபத்துடன் ராம் சிறைக்கு செல்கிறார்.

பிறகு உடனே பிக்பாஸ் ராம் சிறைக்கு செல்லலாமே எனக் கூற போட்டியாளர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் தனலட்சுமி மிகவும் திமிராக நடந்து கொள்கிறார். இதற்கு முன்பு ராம், ஜனனி இருவரும் சிறையில் இருந்த நிலையில் இரண்டாவது முறையாக ராம் சிறைக்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.