விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சியில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். இவனை தொடர்ந்து ஜி.பி முத்து தானாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளார் மேலும் இவரை தொடர்ந்து அசல் கோளாறு வெளியேறி உள்ளார்.
இவ்வாறு தற்பொழுது 18 போட்டியாளர்களுடன் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை நடைபெற்று வருகிறது இந்நிலையில் நேற்று வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் ஏடிக்கே இந்த வீட்டில் யார் யார் எப்படி மாறுவாங்கன்னு தெரியல சத்தியமா சொல்றேன் ஆயிஷா, ஷெரினா, மணி இந்த வெஸ்ட்ட கொடுக்குறதுல என்ன கஷ்டம்.
ஒரு அடி தான் இருக்கும் அந்த குப்பை தொட்டியில கொட்டி வைக்கிறதுல என்ன கஷ்டம் ஒரு பிளேட் கழுவ முடியாதவங்க எப்படி ஒரு விஷயத்தை முன்னோக்கி போவாங்க என்று ராமிடம் கூறுகிறார் அதோடு இந்த ப்ரோமோ நிறைவடைகிறது மேலும் இதனை கமலஹாசன் அவர்கள் கண்டிப்பாக கேட்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
பிறகு இதனைத் தொடர்ந்து இந்த வாரம் போட்டியாளர்கள் அனைவரும் இரு அணிகளாக பிரிந்துள்ள நிலையில் ஏராளமான டாஸ்க்கள் நடைபெற்று வருகிறது. இதன் காரணத்தினால் அனைத்து போட்டியாளர்களும் டப் கொடுத்து வரும் நிலையில் ஏராளமான சண்டைகளும் ஏற்பட்டுள்ளது அந்த வகையில் முக்கியமாக தனலட்சுமி மற்றும் மகேஸ்வரி இருவரும் அசீமிடம் ஏட்டிக்கு போட்டியாக பேசி வருகிறார்கள்.
ஒரு கட்டத்தில் அசீமும் பேச தொடங்க இதனை பார்த்த ரசிகர்கள் பொறுத்தது போதும் பொங்கி எழு தலைவா என கூறி வருகிறார்கள் இந்த வாரம் கமலஹாசன் அவர் அவர்களின் அறிவுரையின்படி அசின் மிகவும் பொறுமையாக யோசித்து விளையாடி வருகிறார் ஆனால் அசீம்க்கு மரியாதை தராமல் தனலட்சுமி, மகேஸ்வரி இருவரும் பேசி வருகிறார்கள். இதனையும் கண்டிப்பாக கமலஹாசன் அவர்கள் கேட்க வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.