தகுதி இல்லாதவர் எனக் கூறிய மகேஸ்வரியை வெளுத்து வாங்கிய அசீம்.! பொறுத்தது போதும் பொங்கி எழுத் தலைவா என ஆதரவளிக்கும் ரசிகர்கள்..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களாக டாஸ்க் மிகவும் கடுமையாக நடைபெற்று வரும் நிலையில் அனைத்து போட்டியாளர்களும் தங்களுடைய சிறந்த விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள் மேலும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்து வருவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக கமலஹாசன் அவர்களிடம் அசீம் மிகவும் கடுமையாக திட்டி வாங்கி வந்தார் மேலும் இதற்கு மேல் சரியாக இருக்க வேண்டும் என அசீம் மிகவும் பொறுமையாக இருந்து வரும் நிலையில் தற்போது மகேஸ்வரிவுடன் கடும் சண்டை ஏற்பட்டு இருக்கிறது. அதாவது தற்பொழுது பிக்பாஸ் வீடு இரண்டு அணிகளாக பிரிந்து இருக்கிறது.

அந்த டிவி, இந்த டிவி என டாஸ்க் நடைபெற்று வருகிறது இதில் நேற்று நடன நிகழ்ச்சி, டிராமா என பல டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் இன்று மகேஸ்வரி மற்றும் அசீமுக்கு இடையே சண்டை ஏற்பட்டு இருக்கிறது மேலும் இருவரும் ஒரே அணியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் அசீமுக்கு பிரேக்கிங் நியூஸ் பற்றி தெரியவில்லை என மகேஸ்வரி கூறியதை கேட்டு கடுப்பான அசீம் அவரிடம் நீங்கள் நடுவராக இருக்க தகுதி இல்லாதவர் என்றும் அதில் நீங்கள் ஜீரோ என்றும் பதிலடி கொடுத்திருக்கும் காட்சிகள் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் இடம்பெற்று இருக்கிறது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் பொறுத்தது போதும் பொங்கி எழுத் தலைவா என ஆதரவளித்து வருகிறார்கள். ஏனென்றால் அசீமை கமலஹாசன் அவர்கள் கடந்த வாரங்களாக திட்டியதால் சக போட்டியாளர்கள் பலரும் அசீமை மிகவும் கேவலமாக பேசி வருவது அவருக்கு மரியாதை கொடுக்காமலும் இருந்து வருகிறார்கள்.

அதில் முக்கியமாக மகேஸ்வரி ,தனலட்சுமி ஆகியோர்களை கூறலாம் இவர்கள் எப்பொழுதும் அசீமை அசிங்கப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். எனவே இதற்கு மேல் ஆசீமை இந்த வாரம் போல் தொடர்ந்தால் கண்டிப்பாக அவர் இன்னும் நீண்ட நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்குவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.