மைனாவை அசிங்கப்படுத்திய போட்டியாளர்கள்.! கடுப்பில் தூக்கி எறியப்பட்ட பொருட்கள்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் சுவாரசியமாக பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது மேலும் போட்டியாளர்கள் அனைவரும் சண்டைகள் போட்டுக் கொண்டாலும் போட்டி என்று வந்து விட்டால் மிகவும் மாசாக விளையாடி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் வாரம் தோறும் லக்சரி பட்ஜெட் டாஸ்க் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் பிக்பாஸ் தொடர்ந்து போட்டியாளர்களுக்கு இடையே சண்டை ஏற்படும் வகையில் டாஸ்க்களை அறிமுகப்படுத்தி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இந்த வாரம் புது டாஸ்க் நடைபெற இருக்கிறது அதில் வீடு ராயல் மியூசியமாக மாற வேண்டும் என கூறப்படுகிறது அதில் ராஜா, ராணி, இளவரசி, சேவகன் போன்ற ரோல்களில் இந்த டாஸ்க் நடைபெற இருக்கிறது.

எனவே அந்த டாஸ்க் அறிவிக்கும்பொழுது போட்டியாளர்கள் அந்த ரோலுக்காக முண்டியடித்து வருகிறார்கள். இளவரசியாக யாரை தேர்வு செய்கிறீர்கள் என அசீம் கேட்கிறார் அப்பொழுது மைனாவுக்கு ஒருவர் கூட வாக்கு அளிக்கவில்லை அதன் பிறகு அதிக வாக்குகள் அடிப்படையில் ஜனனி தான் இளவரசியாக தேர்வாகிறார்.

அதன் பிறகு இறுதியில் சேவகனாக நிற்கிறார் அப்பொழுதும் ஒரு போட்டியாளர் கூட வாக்களிக்கவில்லை எனவே இப்படி எல்லோரும் அசிங்கப்படுத்துகிறீர்களே இளவரசி முதல் சேவகன் வரை அனைத்திலும் நின்றுவிட்டேன் ஒருவர் கூட எனக்கு வாக்களிக்கவில்லை எல்லாம் என் முதுகில் குத்தி விட்டார்கள் எனக் கூறி கோபத்தில் தலையணையை தூக்கி எறிகிறார்.

மேலும் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் பொழுது இவ்வளவு சண்டை சச்சரவுகள் இருந்து வரும் நிலையில் கண்டிப்பாக இந்த வாரமும் ரகளை தான். மேலும் இந்த வார இறுதியில் ஞாயிற்றுக்கிழமை அன்று எந்த போட்டியாளர் வெளியேறுவார் என்று ஆர்வம் மக்கள் மத்தியில் அதிக அளவில் இருந்து வருகிறது.