பழைய போட்டியாளரை களம் இறக்கிய பிக்பாஸ்.! வந்தவுடன் விக்ரமனை வெளுத்து வாங்கிய அந்த நபர் யார் தெரியுமா.? வரவேற்கும் ரசிகர்கள்

bigg-boss
bigg-boss

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி தொடங்கி தற்பொழுது 90 நாட்களைக் கடந்துள்ள நிலையில் டிஆர்பியில் முன்னணி வகித்து மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம் இந்நிகழ்ச்சியில் இருந்து சின்னத்திரை நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இவரை அடுத்து விக்ரமன், அசீம், ஷிவின், அமுதவாணன், மைனா நந்தினி, கதிரவன் மற்றும் ஏடிக்கே ஆகியவர்கள் பிக்பாஸ் வீட்டில் பங்கு பெற்று வருகிறார்.

இன்னும் ஒரு வாரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடியிருக்கும் நிலையில் இறுதி கட்டத்தை நோக்கி பயணித்து வருவதால் மிகவும் கடுமையாக தரப்பட்டு வருகிறது. மேலும் இந்த வார இறுதியில் டபுள் எபிக்ஷன் இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது இப்படிப்பட்ட நிலையில் இந்நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டிற்கு புதிதாக ஒருவர் என்று தர இருக்கிறார்.

அதாவது தற்பொழுது இருக்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள் சிலர் மிகவும் சிறப்பாக இருந்து வரும் நிலையில் அனைவரையும் சூடேற்ற வேண்டும் என்பதற்காக தரமான போட்டியாளரை பிக்பாஸ் வீட்டில் அறிமுகப்படுத்த இருக்கிறார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடைந்தவர் தான் சுரேஷ் தாத்தா.

இவர் சும்மாவே அனைவரையும் வலுத்தெடுப்பார் இப்படிப்பட்ட நிலையில் அமுதவாணன் மற்றும் விக்ரமனை வச்சு செய்துள்ளார் அந்த புரோமோ தற்பொழுது வெளியாகி உள்ள நிலையில் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை அடுத்து இந்த வாரம் பணம் பெட்டி டாஸ்க்கும் நடைபெற இருக்கிறது எனவே இதனை எடுத்துக் கொண்டு யார் வெளியேறுவார் என்று எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது.

அந்த வகையில் கதிரவன் அல்லது மைனா நந்தியின் இருவரில் ஒருவர் பணப்பெட்டியை எடுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது இப்படிப்பட்ட நிலையில் இந்நிகழ்ச்சி முடிய இருக்கும் இந்த வாரம் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாக இருக்கிறது. இவ்வாறு சுரேஷ் தாத்தா வந்துள்ள நிலையில் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து உள்ளார்கள் இதனை பார்த்தவுடன் வா வா வா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.