விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி தொடர்ந்து மிகவும் விறுவிறுப்பாக பல சண்டை சச்சரவுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் போட்டியாளர்களுக்கு இடையே நாள்தோறும் சண்டை ஏற்பட்டு வருவதன் காரணமாக பிக்பாசும் அதற்கு ஏற்றார் போல் சண்டை ஏற்படும் வகையில் டாஸ்க் கொடுப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். இதனால் போட்டியாளர்களும் ஒருவருக்கு ஒருவர் பஞ்சமில்லாமல் விளையாடி வருகிறார்கள்.
அந்த வகையில் தற்பொழுது வெற்றிகரமாக ஏழு வாரங்களாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சி இந்த வாரத்தின் தலைவராக மைனா நந்தினி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மைனா நந்தினி ஏற்கனவே ஒருமுறை தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் இந்த வாரம் இந்த சீசனின் முதன் முறையாக ஓபன் நாமினேஷன் செய்யப்பட்டது.
இதனால் பலரும் கடுப்பிலிருந்து வரும் நிலையில் தலைவர் போட்டியில் தனலட்சுமி எப்படியாவது வெற்றிப் பெற வேண்டும் என நினைத்து வந்தார். ஆனால் மைனா நந்தினி தனலட்சுமி தோற்கடித்து இந்த வீட்டின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வெற்றி பெற்ற பிறகு மைனா நந்தினி வேலை செய்வதற்காக சக போட்டியாளர்களை பிரிக்கும் நேரத்தில் தனலட்சுமி வரமுடியாது என கூறுகிறார்.
பலரும் வந்து தனலட்சுமி சமாதானப்படுத்த முயன்றும் தனலட்சுமி போகவில்லை. இதனால் பலருக்கும் தனலட்சுமி பிடிக்கவில்லை இந்நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் தனலட்சுமி, அசிம், ராம், மணிகண்டா, அமுதவாணன், கதிரவன், ராபர்ட் மாஸ்டர் ஆகியோர்கள் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
எனவே இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என்பது தெரியவில்லை ஆனால் தனலட்சுமி நடந்து கொள்ளும் விதம் பலருக்கும் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது எனவே இந்த வாரம் தனலட்சுமி வெளியேற அதிக வாய்ப்பு இருக்கிறது. மேலும் மணிகண்டனுக்கும் குறைவான வாக்குகள் தான் கிடைத்துள்ளது.