ரயில் வண்டி போல் புகைபிடித்த போட்டியாளர்.! பிக்பாஸ் வீட்டை விட்டு அனுப்பிவிடுவேன் என எச்சரித்த பிக்பாஸ்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று மீண்டும் இனிமேல் இதனை செய்து வந்தால் உங்களை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றுவதை தவிர எனக்கு வேறு வழி இல்லை என பிக்பாஸ் கூறியுள்ள நிலையில் இது போட்டியாளர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது தற்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சி 85 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது எனவே இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் இன்னும் இரண்டு வாரங்களில் கிரான்ட் பினாலே நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தற்பொழுது கடும் போட்டி நிலவி வரும் நிலையில் அனைத்து போட்டியாளர்களும் தொடர்ந்து தங்களுடைய சிறந்த விளையாட்டு திறமையை வெளிப்படுத்திகிறார்கள் இதனால் இவர்களுக்கிடையே தொடர்ந்து சண்டைகள் ஏற்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கள் நடைபெற்று வரும் நிலையில் அதில் யார் இந்த வாரத்தின் இறுதியில் அதிக புள்ளிகள் வைத்திருக்கிறார்களோ அவர்கள் முதல் போட்டியாளராக ஃபைனல் லிஸ்ட்டாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எனவே இதற்காக அனைத்து போட்டியாளர்களும் தங்களுடைய கடின உழைப்பை செலுத்தி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் பிக்பாஸ் கன்ஸ்ட்ரக்சன் அறைக்கு ஏடிக்கேவை அழைத்து உங்கள் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். உங்கள் உடல்நிலை மோசமானதற்கு காரணம் நீங்கள் அடிக்கடி புகைபிடிப்பது தான் இனிமேல் நீங்கள் புகை பிடிக்கக் கூடாது என்ற மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளார்கள். எனவே உங்கள் உடல் நலனை நீங்கள் தான் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் இனிமேல் நீங்கள் புகை பிடித்தல் உங்களை வெளியே அனுப்புவதை தவிர வேறு வழி இல்லை என எச்சரிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

இதற்கு ஏடிக்கே தனக்கு மிகவும் மன அழுத்தமாக இருக்கும் நேரத்தில் தான் புகை பிடிக்கிறேன் என்றும் ஏனென்றால் அது தவறு என்று எனக்கு தெரியும் என்றும் இனி மேல் கவனமாக இருந்து கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார். அந்த ப்ரோமோ தற்பொழுது வெளியாகி உள்ளது.